சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 01, 2022
Advertisement
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன் அறிக்கை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள, 'நீட்' விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின், இரு முறை கவர்னரை சந்தித்து கேட்டுள்ளார். எனினும், இன்னும் அது பரிசீலனையில் தான் உள்ளது.முதல்வர் கேட்டும் நடக்கலையா; ஆச்சர்யமாக இருக்கிறதே... அப்போ, கவர்னரை எதிர்த்து,

பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன் அறிக்கை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள, 'நீட்' விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின், இரு முறை கவர்னரை சந்தித்து கேட்டுள்ளார். எனினும், இன்னும் அது பரிசீலனையில் தான் உள்ளது.முதல்வர் கேட்டும் நடக்கலையா; ஆச்சர்யமாக இருக்கிறதே... அப்போ, கவர்னரை எதிர்த்து, முதல்வர் தலைமையில் போராட்டம் நடத்த தயாராகி விடுவீர்களா!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: ஜனாதிபதியின் செயலர் திரிபாதியை சந்தித்து, தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட, 'நீட்' விலக்கு மசோதாவை, கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி மனு அளித்தோம்.அரசியல் ரீதியிலான இந்த முயற்சி, விளம்பரத்திற்கானது என்பதை அறிந்ததால் தான், கவர்னர் அதை கிடப்பில் போட்டுள்ளாரோ?


தமிழக காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் அறிக்கை:
தை மாதமில்லாமல் மார்கழியில் பொங்கல் கொண்டாட உள்ளனர், தமிழக பா.ஜ.,வினர். மார்கழியில் பிரதமர் மோடியை மதுரைக்கு அழைத்து வந்து, மோடி பொங்கல் கொண்டாட உள்ளனர். இதுபோல, குஜராத்தில் நவராத்திரிக்கு முன், மோடி நவராத்திரி கொண்டாடுவரா?இது கிடக்கட்டும்... காங்., என்றாவது ராகுல் அல்லது சோனியாவை, தமிழகம் அழைத்து வந்து இப்படி விழா நடத்தியுள்ளதா? கட்சிக் கொடியைக் கூட சரியா கட்டத் தெரியாதவங்களுக்கு, மோடி எது செஞ்சாலும் குத்தமா தான் தெரியும்!


நடிகர் எஸ்.வி.சேகர் அறிக்கை:
பெரிய ஆபீசர் வீட்டு நாய் இறந்து போனது. ஏராளமானோர் வந்து அவரிடம் துக்கம் விசாரித்தனர். அந்த ஆபீசரே ஒரு நாள் இறந்து போனார். ஒருவர் கூட வந்து துக்கம் விசாரிக்கவில்லை. இது தான் உலகம்.எந்த காலத்திற்கும் பொருந்தும் பொதுவான நிலை இது. இப்போதைய அரசியலுக்கு வெகுவாக பொருந்தும்!தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன் அறிக்கை:
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை முதல்வராக்க, அவரின் தந்தை ராமதாஸ் அடிக்கடி உதாரணமாக கூறும், கர்நாடகாவின் ம.ஜ.த., சமீபத்தில் அங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 'காலி'யாகி விட்டது.முதலில், தமிழகத்தில் காங்கிரசை கரை சேர்க்க, உங்களைப் போன்ற காங்., முக்கிய தலைவர்கள் ஏதாவது செய்யுங்கள்; அதன் பின், ராமதாஸ், ம.ஜ.த., பற்றி பேசலாம்!


தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை:
'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது' என கவர்னரிடம், அ.தி.மு.க., புகார் அளித்துள்ளது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை இந்த அரசு இன்னும் கைது செய்யாததால் அவ்வாறு கூறியுள்ளதோ!நியாயமாக சொல்லுங்கள், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குசிறப்பாக உள்ளதா? கஞ்சா கடத்தல், கொள்ளை, 'போக்சோ' வழக்குகள் அதிகரிப்புன்னு 'ஜகஜ்ஜோதி'யா இருக்கும்போது, இந்த கிண்டல் தேவையா?


தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர், டி.ஆர்.பாலு பேச்சு:
தமிழகத்தில், 'நீட்' தேர்வு விலக்கு குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை விடுக்க, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் நேரம் கேட்டோம்; கிடைக்கவில்லை.அவருக்கு தெரிந்திருக்கும், இவர்களை சந்திப்பது வீண் வேலை என்று!


காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் அறிக்கை
: நான் நீண்ட காலமாக, பனை ஓலையில், 'விசிட்டிங் கார்டு' மற்றும் அழைப்பிதழ் தயாரித்து பயன்படுத்துகிறேன். பிறரும் இவ்வாறு செய்யலாம். அவ்வாறு செய்தால் பனைமரத் தொழிலாளர்கள் வாழ்வு மேம்படும்.நல்ல யோசனை தான். உங்களைத் தவிர வேறு யாரும் செய்வதில்லையே... கள் விற்பனைக்கு அளிக்கும் ஆதரவை கூட, கள் இயக்கத் தலைவர் நல்லசாமி போன்றோர் பனை ஓலைக்கு கொடுப்பதில்லையே!


சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடரும் நடிகை கஸ்துாரி அறிக்கை
: ஒரே நாள் மழையில், சிங்கார சென்னை மூழ்கி விட்டதே... மந்திரிகளே, அதிகாரிகளே... கொஞ்சம் மனசாட்சியோட, நியாயமாக வேலை செய்து, ஓட்டு போட்ட மக்களை கரை சேருங்க!கேரளாவில் எவ்வளவு மழை பெய்தாலும், எங்கும் தண்ணீர் தேங்குவதில்லை. பெரும்பாலான மாநிலங்களிலும் அப்படித் தான் நிலைமை. ஆனால், நம் மாநிலத்தில் தான் இந்த இழிநிலை மாற வேண்டும்!தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை
: காலையில் தஞ்சையில் ஆய்வு, கலைஞர் சிலை திறப்பு. மாலையில் திருச்சியில் ஆய்வு, நலத்திட்டங்கள் வழங்கல். நடு இரவில் சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தல். மீண்டும் காலையில், 'ஒமைக்ரான்' பரவலை கட்டுப்படுத்த நிபுணர்களுடன் ஆலோசனை என முதல்வர் ஸ்டாலின், ஓய்வே அறியாத சக்கரம் போல சுழல்கிறார்.முதல்வர் சுழன்று என்ன செய்ய... கொரோனாவைத் தடுக்க சரியான தீர்வு கொடுக்க முடியலியே!


விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் சண்முகம் அறிக்கை:
விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அந்த பணி நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது துவங்கியுள்ளதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.அச்சப்பட வேண்டாம் என, உங்களைப் போன்ற விவசாயிகள் சங்கத்தினர் சொல்லி தேற்ற வேண்டியது தானே; அது தானே உங்கள் பணி!தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
சென்னை குயப்பேட்டை போன்ற இடங்களில், மீனவர்களுக்கு மீன் சந்தை கட்டி கொடுப்பது அரசின் வேலையா அல்லது ஹிந்து அறநிலையத்துறையின் வேலையா? ஹிந்து கோவில் கட்டடத்தில் மீன் சந்தை கட்டுவது நியாயமில்லை.மீன் சாப்பிட்டால் நம்மவர்கள் கோவிலுக்கே செல்ல மாட்டார்கள். நிலைமை இப்படி இருக்க, கோவில் கட்டடத்திலேயே மீன் சந்தைன்னு, மக்களையும், கடவுளையும் அவமதிக்கும் செயல் ரொம்ப ஓவரா தான் இருக்கு!

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X