அதன் மூலமாக, பெண்கள் பொருளாதார ரீதியாக வலிமை பெற முடியும். கல்வியில் முன்னேறிய தமிழகம் போன்ற மாநிலங்களிலேயே பின்தங்கிய மாவட்டங்களில் பெண்களின் கல்வி, போதிய அளவுக்கு மேம்படவில்லை. இதை பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட, சட்டசபையில் பேசி இருக்கின்றனர்.இப்போது என்ன நடக்கிறது... பெண்களுக்கு, 18 வயது முடியக் காத்திருந்து, உடனே, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.அவள் 19 வயதில் முதல் குழந்தைக்குத் தாயாகிறாள்; 21 வயதுக்குள் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து, உடல் ரீதியாக பலவீனமாகி விடுகிறாள். இதைத் தடுக்கவே, இத்தகைய சட்டம் அவசியமாகிறது. குழந்தை திருமணங்களை தடை செய்யும் சட்டம் மூலமாக குழந்தைத் திருமணங்கள் பெருமளவு கட்டுப்படும். இந்த சட்டம் மூலமாக, தண்டனை குறித்த பயம், குற்றத்தைக் குறைக்கும் என்பது ஒரு பக்கம் என்றால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நல்ல பயன் தரும்.மேலும், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பிணிப் பெண்கள் மரணம் போன்றவற்றுக்கும் தீர்வு காண முடியும். கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதார சுதந்திரம் போன்றவையும் பெண்களுக்குக் கிடைக்கும்.
இரும்புச் சத்து குறைஞ்சா 'டல்'லாயிடுவீங்க!
நடிகை கே.ஆர்.விஜயா: இந்த கொரோனா நேரத்துல இருமல், தும்மல்ன்னு வந்தாலே நாமெல்லாம் கொஞ்சம் பயந்துடுறோம். அது மட்டும் இல்ல; நம்ம பக்கத்துல இருக்கிறவங்க யாராவது ஒருமுறை தும்மினாலோ, இருமினாலோ கூட, கொரோனாவா இருக்குமோன்ற பயமும் நிச்சயமா எல்லாருக்குமே மனசுல தோணுது.
சாதாரண இருமலுக்கு மட்டுமல்ல, தொண்டை கரகரப்பா இருக்குன்னா, அது உடனே, 'கன்ட்ரோல்' ஆகறதுக்கு வெற்றிலையில், மிளகு வைத்து சாப்பிட்டால், ரொம்ப நல்லது. 10 மிளகை சாப்பிட்டு பகைவர் வீட்டுக்கு கூட போய் சாப்பிடலாம்னு சொல்வாங்க. மிளகுக்கு அத்தனை, 'பவர்' இருக்கு. வெற்றி லையுடன், மிளகை சாப்பிடும் போது, வெற்றிலையின் நன்மைகளும் சேரும்.சாதாரணமாக கூட இதை தாராளமா எடுத்துக்கலாம்.சிறு வயதில் கேரளாவின், திருச்சூர்ல இருந்த சமயம், எங்க வீட்டு தோட்டத்தில் இருந்த மரங்கள் நடுவே கண்ணாமூச்சி விளையாடுறது வழக்கம். எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு பெரிய பாறை இருக்கும். அது பின்னாடி
ஒளிஞ்சிப்போம்.
சில நேரங்களில், 'லவுட் ஸ்பீக்கரில்' பாட்டுகள் போடும் போது, அந்த பாறை மேல நின்னு 'ஸ்டேஜ்' மாதிரி நினைச்சுக்கிட்டு பரதநாட்டியம் 'டான்சர்' மாதிரி அபிநயம் பண்றதுன்னு, எங்களுடைய குழந்தைப் பருவம் அவ்வளவு ஜாலியா இருந்தது. ஆனா, இன்னிக்கு குழந்தைகள் எல்லாரும் 'மொபைல் போன், லேப் டாப்'ன்னு உட்கார்ந்த இடத்திலிருந்து எல்லாத்தையுமே செய்றதால ஆரோக்கியம் பாதிக்கப்படுது.
முக்கியமா, நிறைய பேர் ரொம்ப 'டல்'லா இருக்காங்க. இதுக்கு முக்கிய காரணம், இரும்புச் சத்து குறைவான உணவை சாப்பிடுவதுன்னு நினைக்கிறேன். அதனால, சாப்பிடும் உணவு சத்து நிறைந்ததா இருக்கான்னு சரிபார்த்து சாப்பிடறது நல்லது.குறிப்பா பெண்களும், வளரும் குழந்தைகளும், சிறு தானிய வகைகளில் ஒன்றான, கம்பை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இரும்புச் சத்து பூரணமா கிடைக்கறதுக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது கம்பு அடை செய்தும் சாப்பிடலாம். அதை நம் ருசிக்கு ஏற்றார் போல், முருங்கை கீரை, வெல்லம் சேர்த்து நம் சுவைக்கு தகுந்த மாதிரி சுடச்சுட கம்பு அடை செய்து சாப்பிடும் போது மனதிற்கும் சந்தோஷமாகவும், உடம்பிற்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இரும்புச் சத்துடன் புரோட்டின் கலந்த உணவும் சாப்பிடுவது நல்லது. கொரோனாவால பாதிக்கப்பட்டவங்களுக்கு உடலில் புரோட்டின் குறையறதா சொல்றாங்க; சுண்டல் சாப்பிடலாம். வாயு பிடிக்காமல் இருக்க, இஞ்சி, பூண்டு சேர்த்து சாப்பிடுறது நல்லது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE