வங்கிகளின் ஏ.டி.எம்., சேவைக் கட்டண உயர்வு நேற்று முதல் அமல்

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (21)
Advertisement
புதுடில்லி-வங்கிகளின் ஏ.டி.எம்., சேவைக்கான கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அந்த வங்கியின் ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்தில் மாதம் ஐந்து முறை கட்டணமின்றி நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை பெறலாம்.அத்துடன் பிற வங்கிகளின் நகர்ப்புற ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், கிராமப்புற ஏ.டி.எம்.,களில் ஐந்து முறையும்
வங்கிகள், ஏடிஎம்., சேவைக் கட்டணம், அமல்


புதுடில்லி-வங்கிகளின் ஏ.டி.எம்., சேவைக்கான கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அந்த வங்கியின் ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்தில் மாதம் ஐந்து முறை கட்டணமின்றி நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை பெறலாம்.அத்துடன் பிற வங்கிகளின் நகர்ப்புற ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், கிராமப்புற ஏ.டி.எம்.,களில் ஐந்து முறையும் இலவசமாக நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை பெறலாம். இந்த வரம்பிற்கு மேற்பட்ட ஒவ்வொரு சேவைக்கும் தலா 20 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது.


latest tamil news


இது தற்போது 1 ரூபாய் உயர்த்தப்பட்டு, 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜி.எஸ்.டி.,யும் வசூலிக்கப்படும். இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏ.டி.எம்., மையத்தின் நிர்வாகச் செலவுகள் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டி, இந்த கட்டண உயர்வை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆறரை ஆண்டுகளுக்கு பின், ஏ.டி.எம்., சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
02-ஜன-202219:37:15 IST Report Abuse
spr ஆன் லைன் பணப்பரிவர்த்தனை சிறப்பான ஒன்றே ஆனால் இந்தியாவில் அது பாதுகாப்பான ஒன்றாக இல்லை பிரச்சினைகள் ஏற்படுமானால் நுகர்வோர் குறை தீர்ப்புக்கு முறையான அமைப்புக்கள் இல்லை இழப்பீடு பெறுவது அத்தனை எளிதல்ல பிரச்சினையை அனுபவித்தவருக்கே புரியும் இதனால் சட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழும் சிலரது வங்கிக்கு வராத பணம் (அது கறுப்புப் பணமல்ல முறையாக வரி கட்டி சேர்த்த பொருள்) வாங்கி கணக்கில் காட்டப்படலாம் ஆனால் அதுவே தொழிலாக நடத்தப்படும் கறுப்புப் பண நடமாட்டம் குறையாது நிதி ஆலோசகர்கள் இருக்கும்வரை வரி ஏய்ப்பு வரி திட்டமிடுதல் என்றாகும் குறையாது எனவே எந்தவிதக் கட்டமைப்பும் இன்றி மின்னணு பரிவர்த்தனையை கட்டாயமாக்குவது மோடிக்கு வெற்றியே பிரச்சினையை அனுபவிக்காதவர் பாராட்டலாம் கல்வியறிவு குறைவான சிறு குறு வியாபாரிகள் மற்றும் மக்களுக்குத் தொல்லையே பண இழப்புக்கே வழி வகுக்கும் .
Rate this:
Cancel
02-ஜன-202209:55:39 IST Report Abuse
ஆரூர் ரங் ஆறு ஆண்டுகளில் ஊழியர்கள் சம்பளம் படிகள், போக்குவரத்து செலவு, வாடகை, பாதுகாப்பு செலவு மட்டுமல்ல. நிதி நிர்வாக செக்யூரிட்டி மென்பொருளுக்கான செலவு பத்துமடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இன்றும் மாதம் பல கோடி செலவு🤔 பிடிக்கும் மொபைல் வங்கி, இணைய வங்கி சேவைகள் இலவசமாகவே அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கேஷாக கையாள்வதைக் குறைத்தால் நமக்கும் நாட்டுக்கும் நல்லது. மிச்சப்படும் பணம் முத்ரா கடன் போன்ற திட்டங்களுக்குத் உதவட்டும்.
Rate this:
02-ஜன-202212:45:58 IST Report Abuse
அப்புசாமிஅப்ப ஏ.டி.எம் கள் எதுக்கு? ஏ.டி.எம் கள் எல்லாத்தையம் இழுத்து மூடிட்டா மக்கள் 100 சதவீதம் டிஜிட்டலுக்கு மாறிடலாமே.....
Rate this:
Cancel
02-ஜன-202209:47:48 IST Report Abuse
ஆரூர் ரங் ரொக்கப் பரிமாற்றதுக்கு நிறைய கட்டுபாடு மற்றும் வரி போட்டால் மட்டுமே டிஜிட்டல் பரிமாற்றம் வளரும். கணக்கில் காட்டாத கறுப்புப் பணமும் வரிஏய்ப்பும் குறையும் . வெகு சில அரசு ஊழியர்களைதான் ATM பக்கம் பார்த்திருக்கிறேன். ( மேல் வரும்படி ரொக்கமாத்தானே😉 வருது,?).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X