எம்.பி.,க்களை சந்திக்க ஜனாதிபதி மறுப்பு!

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (67)
Advertisement
புதுடில்லி: தி.மு.க., - எம்.பி.,க்கள் டில்லியில் யாரைச் சந்தித்தாலும், மறுநாளே தமிழக தினசரிகளில் புகைப்படம் வெளியாகும். ஆனால் சமீபத்தில் 'நீட்' தேர்வு தொடர்பாக, டில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இந்த எம்.பி.,க்கள் மனு அளித்தனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகவில்லை. காரணம் இவர்கள் மனுவை ஜனாதிபதி மாளிகை வரவேற்பறையில் கொடுத்துவிட்டு வந்து விட்டனர்.

புதுடில்லி: தி.மு.க., - எம்.பி.,க்கள் டில்லியில் யாரைச் சந்தித்தாலும், மறுநாளே தமிழக தினசரிகளில் புகைப்படம் வெளியாகும். ஆனால் சமீபத்தில் 'நீட்' தேர்வு தொடர்பாக, டில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இந்த எம்.பி.,க்கள் மனு அளித்தனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகவில்லை. காரணம் இவர்கள் மனுவை ஜனாதிபதி மாளிகை வரவேற்பறையில் கொடுத்துவிட்டு வந்து விட்டனர். ஜனாதிபதியைச் சந்திக்கவில்லை.



latest tamil news


தி.மு.க., - எம்.பி.,க்கள் ஜனாதிபதியைச் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. தி.மு.க., - எம்.பி.,க்கள் கொடுத்த மனு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு உள்ள நீட் மசோதா தொடர்பானது. இந்த விவகாரம் இப்போது தமிழக கவர்னரிடம் நிலுவையில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஜனாதிபதி எதுவும் செய்ய முடியாது என்பதால், தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. தமிழக கவர்னர் தன் ஒப்புதலை அளித்து, பின் ஜனாதிபதிக்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்.


latest tamil news


இதற்கிடையே தமிழக கவர்னர் பரிசீலனையில் இந்த விவகாரம் உள்ளதாக செய்திகள் வெளியாயின. பிரதமர், கவர்னர் உட்பட முக்கிய பதவியில் உள்ளவர்களுக்கு மனு அனுப்பினால், 'உங்கள் விஷயம் எங்கள் பரிசீலனையில் உள்ளது' என, பதில் அளிப்பது வழக்கம்; அப்படித்தான் கவர்னர் அலுவலகத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பரிசீலனையை வைத்து எந்த முடிவுக்கும் வரக் கூடாது, என்கின்றன டில்லி வட்டாரங்கள்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
02-ஜன-202220:40:26 IST Report Abuse
தமிழன் என்னது மஹான்களை ஜனாதிபதி சந்திக்கவில்லையா?
Rate this:
Cancel
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
02-ஜன-202219:56:20 IST Report Abuse
R VENKATARAMANAN நீட் தேர்வு அவசியம். இதை எக்காரணம் கொண்டும் விளக்கக்கூடாது. அப்படி நீக்கினால் இவர்கள் கஜானா நிரப்ப வாய்ப்பு அளித்ததாகும் . எனவே இதை கவர்னர் நிராகரிக்கவேண்டும்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
02-ஜன-202219:19:07 IST Report Abuse
DVRR திருட்டு திராவிடர் மடியல் அரசு எம்பிக்கள் தானே என்று இவ்வளவு அலட்சியம் காட்டுவது தவறு அவர்கள் நீட் தேர்வினால் வருடம் ரூ 1250 கோடி அதாவது ஒவ்வொரு மெடிக்கல் சீட்டும் வெறும் 12வது சர்டிபிகேட் கொடுத்து ரூ 1கோடி கொடுத்து சீட் வாங்கினார்கள்???இப்போ வெறும் 10சீட் மருத்துவ கல்லூரி உரிமையாளர்களுக்கு அதுவும் நீட் என்ன மார்க்கு வேண்டுமோ அதை வாங்கினால் தான் அது செல்லும் அவர்கள் வெறும் ரூ 10 லட்சம் தான் வாங்க வேண்டும்????இவ்வளவு கண்டிஷன் என்றால் எவனய்யா கொடுப்பான் பெரிய பணமுடிச்சு???அது தான் இவர்கள் காழ்ப்புணர்ச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X