சிவனுக்கு பெருமை சேர்த்த டி.கே.ஜெ., மியூசிக் அகாடமி ஸ்ரீராம் பேச்சு

Added : ஜன 02, 2022 | |
Advertisement
'நெக்குருகி உனைப் பணிந்தால் என்றும் நம்பிக் கெட்டவர் எவரய்யா' எனும் பாடல் ஒலித்தால், அவற்றை இயற்றிய பாபநாசம் சிவனை விட, நம் மனக்கண் முன் தோன்றுபவர், இவற்றை மனமுருகி, நெக்குருகிப் பாடிய டி.கே.ஜெ., எனப்படும் சங்கீத கலாநிதி டி.கே.ஜெயராமனே. பாபநாசம் சிவனுக்கே புகழ் சேர்த்தவர் இவர். சங்கீத கலாநிதி டி.கே.பட்டம்மாளின் தமையனார். பட்டம்மாளையும் அவர் எவ்வாறு இந்தியாவின்
 சிவனுக்கு பெருமை சேர்த்த டி.கே.ஜெ.,  மியூசிக் அகாடமி ஸ்ரீராம் பேச்சு

'நெக்குருகி உனைப் பணிந்தால் என்றும் நம்பிக் கெட்டவர் எவரய்யா' எனும் பாடல் ஒலித்தால், அவற்றை இயற்றிய பாபநாசம் சிவனை விட, நம் மனக்கண் முன் தோன்றுபவர், இவற்றை மனமுருகி, நெக்குருகிப் பாடிய டி.கே.ஜெ., எனப்படும் சங்கீத கலாநிதி டி.கே.ஜெயராமனே. பாபநாசம் சிவனுக்கே புகழ் சேர்த்தவர்

இவர். சங்கீத கலாநிதி டி.கே.பட்டம்மாளின் தமையனார். பட்டம்மாளையும் அவர் எவ்வாறு இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பேசிய மேடைகளில் பாடி, அந்த இயக்கத்துடனேயே வாழ்ந்தவர் என்பதை நாடறியும், உலகறியும். மியூசிக் அகாடமியின் காரியதரிசியும், கர்நாடக இசையைப் பொறுத்த மட்டில் ஒரு சரித்திர ஆசிரியர் என்றே பெயர் பெற்று, அதை நிலைபெறச் செய்துள்ள வி.ஸ்ரீராம், டி.கே.ஜெ., பற்றி சமீபத்தில் டாக் மையத்திற்காகப் பேசியவற்றிலிருந்து:டி.கே.ஜெ., அவரது பெற்றோருக்கு 22 ஜூலை 1928 அன்று ஆறாவது மகனாகப் பிறந்தவர். இசை உலகில் பட்டம்மாள் 'பேமஸ்' ஆகிவிடவே, மேலும் சிறப்புற அவருக்கு நிறைய உருப்படிகள் தேவைப்பட்டன.அவற்றைத் திரட்டும் பணியில், டி.கே.ஜெ., ஈடுபட்டார். எங்கெல்லாம் கச்சேரிகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் சென்று அவற்றை எழுதிக் கொண்டு வந்து கொடுத்து விடுவார். அதே போல பட்டம்மாளும் டி.கே.ஜெ., இல்லாமல் மேடையேறுவதில்லை என்றாகி விட்டது. அந்தப் பக்க பலம் தேவைப்பட்டது. ஒரு முறை கல்கி, இவர்கள் இருவரும் பாடுவதைக் கேட்டுவிட்டு, பட்டம்மாள் இருக்கட்டும், அம்பியின் அரங்கேற்றம் எத்தகையது என்று பாராட்டியுள்ளார். டி.கே.ஜெ., பாடிய ஹிந்துஸ்தானி பாடல்கள் கல்கியைக் கவர்ந்து விட்டிருக்கின்றன. கல்கியிடமிருந்து பாராட்டு பெறுவது சுலபமல்ல.ஆரம்பத்தில் இருந்தே ஒரு சமயோஜித புத்தி பெற்று விளங்கிய டி.கே.ஜெ., ஆடியன்சுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறியும் சூட்சுமத்தை அறிந்தவராகிவிட்டார். பட்டம்மாளின் காதைக் கடிப்பதை, ரசிகர்கள் அடிக்கடி காண்பது சகஜமாகிவிட்டது. டி.கே.ஜெ., வைப் பொறுத்த மட்டில், பட்டம்மாள் தனது முதல் குரு, இசைக்கான வழிகாட்டி தான் தனது அக்காள் என்பார் அவர். கடந்த 1931ல் இவருக்குப் பாபநாசம் சிவனிடம் பழகும் பாக்கியம் கிடைத்தது. வெகு விரைவில் இது ஒரு நெருக்காமான ஒன்றாகி சிவன் டி.கே.ஜெ.,வைத் தன் மகனாகவே பாவித்தார். எந்த அளவிற்கு என்றால், அன்பு மேலிட, பல தருணங்களில் சிவன் காலையில் ஒரு பாடலை இயற்றினால், அதை அக்காளும் தம்பியும் மத்தியானம் கற்று, மாலைக்குள் இசைத்தட்டு ரெடி. இன்னொரு மறக்க முடியாத நிகழ்வு டி.என்.ஆர்., எனப்படும் நாதஸ்வரத்தின் தந்தை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை இவருக்கு அளித்த பாராட்டு.ஒரு திருமண விழாவில் இவர்கள் இருவரும் பாடிய, மாருபல்க என்ற ஸ்ரீரஞ்சனி ராகப் பாடலை, அதிலும், முக்கியமாக டி.கே.ஜெ., பாடியதைக் கேட்டு மெய்மறந்து பாராட்டினார்.தான் அணிந்திருந்த மதிப்பு மிகுந்த சால்வையை அவருக்குப் போர்த்தி, அவருக்கு இசைத் தம்பி என்ற பட்டத்தையும் கொடுத்தார் டி.என்.ஆர்., சைக்கிளிலேயே சென்று கற்பித்ததால், டி.கே.ஜெ., சைக்கிள் பாகவதர் என்றே அழைக்கப்பட்டார். இத்தனை இருந்தும் உடல் நலக்குறைவு டி.கே.ஜெ.,வைப் பெரிதும் பாதித்தது. முக்கியமாக நரம்பு சம்பந்தப்பட்ட சுகக்கேடு கண்டு, விரல்கள் அவற்றின் இயல்பான செயல்பாட்டுத் தன்மையற்று, உருக்குலைந்து கடைசி நாள் வரை இருந்தன. இது பெரும் வருத்தத்திற்குரியது.சென்னைக்கு டி.கே.ஜெ., நிரந்தரமாக வரக்காரணம், பாலக்காடு மணி ஐயரே. அவர் வாசிப்புக்கு சரியாகப் பாடும் மெயின் ஆர்டிஸ்ட் எல்லாம், மதுரை மணி ஐயர், ஜி.என்.பி., வயலின் சவுடைய்யா போன்றோர் மறைந்து விட, அவர் ஆள் தேடிக் கொண்டிருக்க டி.கே.ஜெ., அகப்பட்டார்.கடந்த 1951 ஆம் ஆண்டே, செம்பை சங்கீத கலாநிதியாக டி.கே.ஜெ.,விற்கு மியூசிக் அகாடமியில் பாடும் வாய்ப்பு கிட்டியது. மேலேயே நோக்கிப் பாடுபவர், பால்கனியைப் பார்த்துப் பாடுபவர், சுருதியைப் பொறுத்த வரை பட்டம்மாளுடன் பாடுவதால் சமரசம் செய்து கொண்டவர், இது பட்டம்மாளுக்கும் பொருந்தும். முதிர்ந்த காலத்தில் வெறும் பாடல்களையே கொடுத்தவர் என்றெல்லாம் இவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டு உள்ளது. சங்கீதத்தில் தாளம் சார்ந்த கணக்கு வழக்குகளில், இவர் மன்னாதி மன்னர்; நிரம்பப் படித்தவர்.ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமையுடையவர். 1989ல் சங்கீத கலாநிதி ஏதோ குளறுபடி காரணமாக இவரில்லாமல், மஹாராஜபுரம் சந்தானத்தைச் சென்றடைந்தது. ஒழுக்க சீலராயிருந்த டி.கே.ஜெ., இதைப் பெரிது படுத்தாமல், அடுத்த வருடம் அதாவது 1990ல் பெற்றார். வழங்கியவர் இன்னொரு ஜெயராமன், அதுதான் லால்குடி. டி.கே.ஜெ., தன் ஏற்புரையில், லால்குடியை சர்வகலாநிதி என்று போற்றிப் பேசினார். ஒரே ஒரு பாட்டு கற்றுக் கொள்ளவும் இவரிடம் வந்தவர்கள் உண்டு. சவால்களை ஏற்றுக் கொள்வதில் திண்ணமாய் இருந்தவர். இவரது சீடர்களின் பட்டியல் நீளமானதாகும்: டி.ஜி.பத்ரிநாராயணன், பாலாஜி ஷங்கர், விஜய் சிவா, ஆர்.கே. ஸ்ரீராம்குமார், டாக்டர் ஆர்.சுந்தர் போன்றோர் இதில் உண்டு. இவருக்கு சித்திரம் வரைவது பிடிக்கும். கிரிக்கெட் வெறியர் என்று கூட சொல்லலாம். ஒரு பாசிடிவ் முறையிலேயே வாழ்க்கையை நடத்தியவர். குடும்பத்துடன் நீண்ட பொழுதுகளைக் கழித்தவர். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள்.ஒரு மகன் மிருதங்க வித்வான்; டி.கே.மூர்த்தியின் சீடர். மகள் பாடகி.வாழக்கையை மிக எதிர்த்தமாகவும், லேசாகவும் எடுத்துக்கொண்டு வாழ்ந்த இவர், 1991ல் மறைந்தார். வாழ்ந்தவரை வாழ்வாங்கு வாழ்ந்தவர் என்றே, இவரது சீடர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்களை சேர்ந்தோர் இன்றும் போற்றுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.-எஸ்.சிவகுமார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X