மத்திய அரசின் புதிய திட்டத்தால் டிஜிட்டல் மயமாகிறது மின்வாரியம்

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (21)
Advertisement
சென்னை--மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடங்கள் முதல் வீடுகள் வரை, 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்துவதன் வாயிலாக, மின் வாரியம் 'டிஜிட்டல்'மயமாக உள்ளது.மத்திய அரசு, நாடு முழுதும் தடையில்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், 12 சதவீதம் என்றளவில் உள்ள மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும்

சென்னை--மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடங்கள் முதல் வீடுகள் வரை, 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்துவதன் வாயிலாக, மின் வாரியம் 'டிஜிட்டல்'மயமாக உள்ளது.latest tamil news


மத்திய அரசு, நாடு முழுதும் தடையில்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், 12 சதவீதம் என்றளவில் உள்ள மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும் புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.வினியோக பெட்டிகள்இத்திட்டத்திற்காக, 3.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, மாநில மின் வாரியங்களுக்கு கடனாக வழங்கப்பட உள்ளது.குறிப்பிட்ட காலத்திற்குள் திட்ட பணிகளை முடித்து விட்டால் கடனில் 60 சதவீதம் மானியமாகி விடும்; அந்த தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை.தமிழக மின் வாரியம்,இத்திட்டத்தின் கீழ் அனைத்து துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடங்களில் மீட்டர் பொருத்த உள்ளது.

அதைதொடர்ந்து,டிரான்ஸ்பார்மர்களிலும் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.இதனால் மின் இழப்பு, மின்னழுத்த பிரச்னை உள்ள இடங்கள் துல்லியமாக கண்டறியப்பட்டு, அங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள், மின் வினியோக பெட்டிகள் நிறுவப்படும்.மேலும், வீடுகளிலும் 'ஸ்மார்ட் மீட்டர்'கள் பொருத்தப்பட உள்ளன. இதனால் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஊழியர்கள் நேரில் செல்ல தேவையில்லை.நுகர்வோர் பாதிப்புமின் வழித்தடம் முதல் வீடு வரை பொருத்தப்படும் அனைத்து மீட்டர்களும் தொலைத்தொடர்பு வசதியுடன், மின் வாரிய 'சர்வர்' உடன் இணைக்கப்படும். இதனால், வீடுகளில் மின் பயன்பாட்டை தினசரி, வாரம், மாதம் என கணக்கெடுக்க முடியும்.மின் வழித்தடங்களில் ஏற்படும் பழுதுகளையும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தே, என்ன பிரச்னை என்பதை துல்லியமாக கண்டறிந்து, விரைந்து சரிசெய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட முடியும்.

மின் கம்பம் வாயிலாக செல்லும் மின் வழித்தடங்கள் அதிகம் துாரம் செல்கின்றன. வழித்தடங்களில் கம்பி அறுந்து விழுந்தால் சரிசெய்ய, மின்சாரத்தை முழுதும் நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் மின் தடையால் நுகர்வோர்கள் பாதிக்கின்றனர்.புதுப்பிக்கப்பட்ட திட்டம்இதை தவிர்க்க, புதுப்பிக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ், அதிக துாரம் செல்லும் மின் வழித்தடங்களில் ஒவ்வொரு 2 கி.மீ., துாரத்திற்கும் தனித்தனி 'ஸ்விட்ச் யார்டு' கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.இதனால் மின் வழித்தடத்தில் பழுது ஏற்படும் போது, அந்த வழித்தடம்முழுதும் மின் வினியோகம் நிறுத்துவதற்கு பதில், எந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ, அதற்கு உட்பட்ட 2 கி.மீ., துாரம் மட்டும்மின் வினியோகம் நிறுத்தப்ப்படும்.


latest tamil news
இழப்பு 2 ரூபாய்

இது குறித்து, மின் வாரிய தலைமை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:தற்போது, சில மின் வழித்தடம், டிரான்ஸ்பார்களில் தான் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் அனைத்து மின் வழித்தடங்கள், டிரான்ஸ்பார்மர்களிலும் மீட்டர் பொருத்தப்படும்.மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது, மின் இழப்பு ஏற்படுவது வழக்கம். தற்போது மின் உற்பத்தி, கொள்முதல், வினியோகம் போன்ற செலவுகளை உள்ளடக்கிய, ஒரு 'யூனிட்' மின்சார விற்பனை 9.71 ரூபாயாக உள்ளது.ஆனால் வரவு 7.71 ரூபாயாக இருப்பதால், இரண்டு ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் பூஜ்யமாக குறைக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
02-ஜன-202219:49:37 IST Report Abuse
spr இந்த டிஜிட்டல் பெட்டியை அரசே கொடுக்குமா ஏற்கனவே மின்வாரியத்தால் பெறப்பட்ட முன் வைப்புத் தொகையே திருப்பித் தரப்படவில்லை இதில் இந்த திட்டம் மேலும் சுமையை அதிகரிக்கும் ஒரே வழி இதனைத் தனியார் மயமாக்கல் மட்டுமே பிரச்சினை என்று வந்தால் நீதிமன்றம் செல்ல வழியுண்டு அரசே நடத்தும் பொழுது பணியாளர் சங்கம் கட்ச் சார்புடையதாக இருப்பதால் தண்டனை நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது இதைவிட அவரவர் மின் பயனீட்டு அளவை அவரவரே பதிந்து அதற்கேற்ப ஆன் லைனில் கட்டணம் செலுத்துவதால் மாதா மாதம் கட்ட முடியும் அதற்கென்று ஒரு பணியாளர் தேவையில்லை என்றேனும் ஒரு மாதம் திடீரென்று மின் பயனீடு குறித்து ஆய்வு செய்து குறைவாக கட்டியதாக அறியப்பட்டான் வட்டியுடன் வசூலிக்கலாம் தெருவோரத் திருட்டுக்களை குறைப்பது மக்களின் உரிமையில் கை வைப்பதாகும் என்று அனைத்துப் பேர்வழிகளுக்கு போராடலாம் எனவே எளிதல்ல
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
02-ஜன-202217:13:44 IST Report Abuse
M Selvaraaj Prabu நான் போட்ஸ்வானாவில் கடந்த 20 வருடமாக இருக்கிறேன். நான் வந்த வருடமே (2002ல்) நான் தங்கிய வீட்டில் ஸ்மார்ட் மீட்டர் தான் இருந்தது. செல் போன் சார்ஜ் செய்வது போல, நமக்கு வேண்டிய கரண்டை கடைகளில் வாங்கி கொள்ளலாம். மின்சார வாரியம் கணக்கு எடுக்க வேண்டியது இல்லை. பிரி-பெய்டு தான். மாதா மாதம், கணக்கு எடுப்பதோ, பில் கட்ட கியூவோ கிடையாது. அவரசத்திற்கு (இரவில் திடீரென கரண்ட் போனால்) சுமார் 30 யூனிட் வரை கடன் வாங்கி கொள்ளலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இந்திய அரசு அலுவலகங்கள் சுமார் 20 வருடம் தொழில் நுட்ப வளர்ச்சியில் பின் தங்கி இருக்கின்றன.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
02-ஜன-202220:13:47 IST Report Abuse
கல்யாணராமன் சு.என்னுடைய வகுப்புத் தோழர், மின்வாரிய செயல் பொறியாளர் பணியிலிருந்து 2012ல் விருப்ப ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெறுவதற்கு 10 வருடங்களுக்கு முன்பே இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டங்கள் வரையறுக்கப்பட்டன ..... ஆனால் அதை செயல்படுத்த விடாமல், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், மந்திரிகளும் முட்டுக்கட்டை போட்டு முடக்கிவிட்டனர்..............
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
02-ஜன-202216:48:59 IST Report Abuse
Visu Iyer அப்புறம் என்ன.. மின் பயன்பாட்டிற்கு அதிகபட்ச வரியா ஒரு ஜிஎஸ்டி வரி ..போடுங்க.. மக்கள் அழுதுகிட்டே கட்டிவிடுவார்கள்.. அடுத்தஆண்டு முதல் ஜிஎஸ்டி வரி வசூல் கூட வேண்டாமா? அதை சாதனை என்று சொல்ல வேண்டாமா? இப்போ தானே ஐந்து மாநில தேர்தல் வந்து இருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X