கடலுார் : ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். கடலுாரில் உள்ள கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன.திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் அதிகாலை 3:00 மணியளவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
5:00 மணி முதல் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத தேவநாதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 4.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தன. பாடலீஸ்வரர் தங்கநாக ஆபரண அலங்காரத்திலும், பெரியநாயகி அம்மன் முத்து அங்கி அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.புதுப்பாளையம் ராஜ கோபாலசாமி, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவில், திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர், செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர், முதுநகர் சாலைக்கரை சோழ ஆஞ்சநேயர் கோவில்கள், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. கடலுார் துாய எபிபெனி தேவாலயம், கார்மேல் அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடு நடந்தது.ஸ்ரீமுஷ்ணம்ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் புத்தாண்டையொட்டி, அதிகாலை மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அம்புஜவல்லிதாயார் உற்சவமூர்த்தி யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.நெல்லிக்குப்பம்நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் விநாயகர், லட்சுமி தேவி ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தனர்.வேணுகோபால சுவாமி கோவிலில் பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். எய்தனுார் ஆதிபுரீஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.பெண்ணாடம்பெண்ணாடம், மேற்குரத வீதி, வேதவல்லி தாயார் சமேத வேதநாராயண பெருமாள் சுவாமிக்கு நேற்று அதிகாலை 5:30 மணியளவில் பால், தயிர், சந்தனம், பன்னீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை; காலை 6:30 மணியளவில் பிரகாரத்தில் கோ பூஜை நடந்தது.பிரளயகாலேஸ்வரர் கோவில், திருவள்ளுவர் தெரு செல்வ விநாயகர், இறையூர் தாகம் தீர்த்த புரீஸ்வரர், காமராஜர் தெரு பாலதண்டாயுதபாணி கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அதிகாலை ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. நவக்கிரக சுவாமிக்கு பக்தர்கள் நெய் விளக்கேற்றினர்.மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. நாச்சியார்பேட்டை, மாணிக்கவாசகர் ஐயனார் கோவிலில் காவடி வேலன் சுவாமிக்கு மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். ராஜகோபால சாமி, வரதராஜ பெருமாள், ஏகநாயகர், வேடப்பர், வெண்ணுமலையப்பர், அய்யனார் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE