வானிலை மையத்தை மேம்படுத்த அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை-'சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை மாநில அரசு சார்ந்திருக்கிறது. மிதமான மழைஆனால், பெருமழை

சென்னை-'சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.





latest tamil news

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை மாநில அரசு சார்ந்திருக்கிறது. மிதமான மழைஆனால், பெருமழை குறித்த அறிவிப்புகளை, உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாத நிலை உள்ளது.



உதாரணமாக, டிசம்பர் 30 பகல் 12:00 மணிக்கு, சென்னை வானிலை மையம் ஆய்வறிக்கையில், 'தமிழகத்தில் சில பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம், டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்' என கூறப்பட்டிருந்தது. சென்னையில் சில இடங்களில், இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என தெரிவித்திருந்தது



.மாலை, 3:40 மணிக்கு, வானிலை ஆய்வு மையம் அளித்த எச்சரிக்கை அறிக்கையில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் பெய்யும் என குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால், மிகக் கடுமையான மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், 30ம் தேதி மதியம் முதல் இரவு வரை பெய்தது.



மாலை, 4:15 மணிக்கு, சென்னை வானிலை ஆய்வு மையம், 'ஆரஞ்ச் அலெர்ட்' வெளியிட்டது. அதற்கு முன், அதிக கனமழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து, பல பகுதிகள் மூழ்கின. இதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சென்னை வானிலை ஆய்வு மையத்தில், மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க, போதுமான திறன் குறைபாடாக உள்ளது.



இதனால், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தக்க நேரத்தில் உரிய முன்னேற்பாடு பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.இது பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில், பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உயிர், உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும், முக்கியமான கட்டமைப்புகள் சேதமடை வதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.


'


latest tamil news



ரெட் அலெர்ட்'



இந்த நிகழ்வுகள், வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.எனவே, பெருமழை, புயல் போன்ற 'ரெட் அலெர்ட்' சூழ்நிலைகளை, துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (23)

02-ஜன-202215:35:06 IST Report Abuse
Gopalakrishnan S எங்களுக்கு எட்டு வழி சாலை வேண்டாம் மீத்தேன் வேண்டாம் எரிவாயு குழாய் பதிக்க வேண்டாம் குளச்சல் துறைமுகம் வேண்டாம் ஏன், கூடங்குளம் அணு உலை வேண்டாம் - கலாம் அவர்களின் விஞ்ஞான அறிவையே சந்தேகப் படுவோம் உயர் அழுத்த மின்சார கோபுரங்கள் வேண்டாம். மத்திய அரசை ஒன்றிய அரசு என கேலி செய்வோம் கோ பேக் மோதி என்று தொண்டை நரம்பு புடைக்க கூச்சலிடுவோம். ஆனால் நாங்கள் கேட்பதை எல்லாம் மத்திய அரசு செய்தே ஆகவேண்டும்.
Rate this:
Cancel
Sri - Ghisin,கோஸ்டாரிகா
02-ஜன-202212:09:46 IST Report Abuse
Sri திரு இரமணனன் பிபிசி அளித்த பேட்டியில் கணிணி மட்டுமே தீர்வல்ல அனுபவ சந்தர்ப்ப அறிவை திரு புவிஅரசன் வெளிப்படுத்தி இருக்க வேண்டும் என்று கூறினார்...நமது MP MLA ,டேப்லட் லேப்டாப் செல் போண் கொடுக்கபட்டுள்ளது....அது லஞ்சம் சீக்கரம் சேர்பதற்கே பயன்படுகிறது ..மக்கள் நன்மை எங்காவது ஏற்படுகிறதா??...ஸ்டாலின் உள்ளாட்சி துறை மற்றும் துணை முதல்வராக இருந்தவர் ..திரு இறையண்பு திரு சுகன்தீப் பேடி போன்றவர்களுக்கு 35 வருட அனுபவ அறிவை முதல்வர் முதல் திரு சுகன்தீப் பேடி வரை பயன்படுத்தவில்லையே...அதிமுக அரசை. குறை சொல்வது என்ன தீர்வு....முதல் காரியமாக அனைத்து சாலை மீடியன்களும் எளிதில் அகற்ற கூடிய முறையில் டிசைன் செய்யவேண்டும்..பல நேரங்களில் மீடியன்கள் போக்குவரத்து நெரிசல் அதிகபடுத்துகின்றன...பேரிடர் சமயத்தில் பல உயிரிழப்புக்கும் காரணமாகிவிடுகின்றன..
Rate this:
Cancel
02-ஜன-202211:29:01 IST Report Abuse
Edwin Jebaraj, Tenkasi புத்தியில்லாத வானிலை ஆய்வு மையம். முதல் நாள் மழையை கணிக்க தெரிந்தவனே உண்மையான வானிலையாளர். சென்னையில் நேற்று முன்தினம் இரவு 23 செ.மீ மழையும் நவம்பரில் ஒரே இரவில் 43 செ.மீ மழையும் பெய்தது. இந்த இரண்டுமே இவர்களுக்கு தெரியவில்லை. முதல் மழைக்கு பின்பு உள்ளதை சாதாரண எங்கள் ஊர் விவசாயி வானத்தை பார்த்து சொல்லி விடுவார்.எல்லாம் முடிந்த பின் சப்பைக்கட்டு கட்டும் இவர்களுக்கு ஒரு மையம் அந்த ஆட்களுக்கு சம்பளம். டோட்டல் வேஸ்ட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X