வானிலை மையத்தை மேம்படுத்த அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்| Dinamalar

வானிலை மையத்தை மேம்படுத்த அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (23) | |
சென்னை-'சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை மாநில அரசு சார்ந்திருக்கிறது. மிதமான மழைஆனால், பெருமழை

சென்னை-'சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.





latest tamil news

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை மாநில அரசு சார்ந்திருக்கிறது. மிதமான மழைஆனால், பெருமழை குறித்த அறிவிப்புகளை, உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாத நிலை உள்ளது.



உதாரணமாக, டிசம்பர் 30 பகல் 12:00 மணிக்கு, சென்னை வானிலை மையம் ஆய்வறிக்கையில், 'தமிழகத்தில் சில பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம், டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்' என கூறப்பட்டிருந்தது. சென்னையில் சில இடங்களில், இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என தெரிவித்திருந்தது



.மாலை, 3:40 மணிக்கு, வானிலை ஆய்வு மையம் அளித்த எச்சரிக்கை அறிக்கையில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் பெய்யும் என குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால், மிகக் கடுமையான மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், 30ம் தேதி மதியம் முதல் இரவு வரை பெய்தது.



மாலை, 4:15 மணிக்கு, சென்னை வானிலை ஆய்வு மையம், 'ஆரஞ்ச் அலெர்ட்' வெளியிட்டது. அதற்கு முன், அதிக கனமழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து, பல பகுதிகள் மூழ்கின. இதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சென்னை வானிலை ஆய்வு மையத்தில், மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க, போதுமான திறன் குறைபாடாக உள்ளது.



இதனால், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தக்க நேரத்தில் உரிய முன்னேற்பாடு பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.இது பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில், பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உயிர், உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும், முக்கியமான கட்டமைப்புகள் சேதமடை வதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.


'


latest tamil news



ரெட் அலெர்ட்'



இந்த நிகழ்வுகள், வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.எனவே, பெருமழை, புயல் போன்ற 'ரெட் அலெர்ட்' சூழ்நிலைகளை, துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X