மதுரை -மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரத்தில் பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் மாநகராட்சி கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பா.ஜ., மண்டல் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மண்டல் தலைவர் பிரகாஷ் தலைமையில், செயலாளர்கள் ஆர்.கே.பிரகாஷ், அருள்மிகு மாரி முன்னிலையில் கூட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன், அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராஜரத்தினம், துணை தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மழையால் சேதமுற்று குண்டும் குழியுமாக மாறியுள்ள மாநகராட்சி ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும். பழங்காநத்தம் கிருஷ்ணா நகரில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.