பர்சில் இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக மகனை அடித்துக் கொன்ற தந்தை

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (26)
Advertisement
தானே-'பர்சில்' இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக, 10 வயது மகனை அடித்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்வா நகரில் வசிப்பவர் சந்தீப் பிரஜாபதி. இவருக்கு 10 வயதில் மகன், 6 வயதில் மகள் உள்ளனர். இவரது மனைவி புத்தி சுவாதீனம் இல்லாதவர்.சம்பவத்தன்று இவரது பர்சில் இருந்து 50 ரூபாயை மகன் எடுத்துள்ளான்.ஆத்திரம் அடைந்த சந்தீப், மகனை

தானே-'பர்சில்' இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக, 10 வயது மகனை அடித்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.latest tamil news


மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்வா நகரில் வசிப்பவர் சந்தீப் பிரஜாபதி. இவருக்கு 10 வயதில் மகன், 6 வயதில் மகள் உள்ளனர். இவரது மனைவி புத்தி சுவாதீனம் இல்லாதவர்.சம்பவத்தன்று இவரது பர்சில் இருந்து 50 ரூபாயை மகன் எடுத்துள்ளான்.


latest tamil news


ஆத்திரம் அடைந்த சந்தீப், மகனை கண்மூடித்தனமாக அடித்துள்ளார். மயங்கி விழுந்த மகனை போர்வையில் சுருட்டி வைத்து சென்று விட்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல் அடிப்படையில், போலீசார் வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.

ஆனால் அவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தீப் பிரஜாபதியை கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
02-ஜன-202215:46:48 IST Report Abuse
THINAKAREN KARAMANI சிறுகுழந்தையை இப்படியா கண்மூடித்தனமாக உயிர்போற அளவுக்கு ஒரு அப்பன் அடிப்பான்?. ஏதோ ரெண்டு அடிஅடித்துவிட்டு கண்டிக்க வேண்டியது தான். மயங்கிவிழுந்த மகனுக்கு மருத்துவ உதவி அளிக்காமல் விட்டுவிட்டு ஓடிப்போன அப்பனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
02-ஜன-202215:39:52 IST Report Abuse
மதுமிதா டாஸ்மாக் கஸ்டமர் போலும் கண்மூடித்தனமாக செயல் பட்டு இருக்கிறார்
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜன-202213:54:10 IST Report Abuse
Chinnappa Pothiraj தன்னுடைய மகன் தான் 50 ரூபாய் எடுத்திருக்கிருக்கிறான்.மன்னித்து புத்திமதி சொல்லியிருக்க வேண்டும்.அவருடைய பொருளாதார மற்றும் மனைவியின் புத்தி சுகவீனமில்லாத சூழ்நிலை மேலும் இப்படிப்பட்ட மகனின் குணங்கள் பிற்காலத்தில் ஏற்படும் குடும்பத்தின் அவமரியாதை என்ற தன்மான எண்ணங்கள் கட்டுப்படுத்தமுடியாத உணர்ச்சி வசத்தால் மிக பெரிய தவறு செய்துவிட்டார். இதேநாட்டில் தான் கொலையும்,கொள்ளையும்,பிறர் சொத்தை அபகறிக்கும் நேர்மையற்ற மன்னிக்கமுடியாதவற்றை செய்வதை திறமைசாலிகள் என்ற போர்வையில் தொழிலாக கொண்டுள்ளனனர்.இதே நாட்டில்தான் மேற்கூறியவற்றை ஒரே ஊரைச்சேர்ந்த குறிப்பிட்ட சமூகமே செய்வதாக பத்திரிக்கையில் படித்தது.இவர்களுக்கும் லஞ்சம் ஊழல் இவற்றால் வழக்கை சந்தித்து தண்டனை பெற்ற மானிடர்களும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் சகஜமாக கம்பீரமாக வாழ்க்கையை நடத்துகின்றனர். சட்டம் ஒழுங்கு,நீதி,தர்மம் இதை செயல்படுத்தும் அமைச்சர் பெருமக்களும், துறைசார்ந்த வல்லுநர்களும் பொதுமக்களின் பணத்தில் சம்பளம் வாங்குபவர்களின் கடமை என்ன?இதை எப்படி நினைத்துக்கொள்வது. யாருடைய மனதையும் புண்படுத்துவது என்நோக்கமல்ல,நாடும் நாட்டு மக்களும் நலமாக,அமைதியாக,சந்தோசமாக தர்மத்தில் சிறந்த நாடாக இருக்கவேண்டும் என்பதே எல்லாம் வல்ல எம்பெருமானிடம் வேண்டுகிறேன்.வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X