பர்சில் இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக மகனை அடித்துக் கொன்ற தந்தை| Dinamalar

பர்சில் இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக மகனை அடித்துக் கொன்ற தந்தை

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (26) | |
தானே-'பர்சில்' இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக, 10 வயது மகனை அடித்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்வா நகரில் வசிப்பவர் சந்தீப் பிரஜாபதி. இவருக்கு 10 வயதில் மகன், 6 வயதில் மகள் உள்ளனர். இவரது மனைவி புத்தி சுவாதீனம் இல்லாதவர்.சம்பவத்தன்று இவரது பர்சில் இருந்து 50 ரூபாயை மகன் எடுத்துள்ளான்.ஆத்திரம் அடைந்த சந்தீப், மகனை

தானே-'பர்சில்' இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக, 10 வயது மகனை அடித்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.



latest tamil news


மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்வா நகரில் வசிப்பவர் சந்தீப் பிரஜாபதி. இவருக்கு 10 வயதில் மகன், 6 வயதில் மகள் உள்ளனர். இவரது மனைவி புத்தி சுவாதீனம் இல்லாதவர்.சம்பவத்தன்று இவரது பர்சில் இருந்து 50 ரூபாயை மகன் எடுத்துள்ளான்.


latest tamil news


ஆத்திரம் அடைந்த சந்தீப், மகனை கண்மூடித்தனமாக அடித்துள்ளார். மயங்கி விழுந்த மகனை போர்வையில் சுருட்டி வைத்து சென்று விட்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல் அடிப்படையில், போலீசார் வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.

ஆனால் அவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தீப் பிரஜாபதியை கைது செய்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X