இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் தினசரி கோவிட் பாதிப்பு அதிகரிப்பு

Updated : ஜன 03, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (3)
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ளது. 23 மாநிலங்களில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 560 பேர் குணமடைந்துள்ளனர்.
India, Covid, covid19,omicran, healthministry, omicraninindia, omicranvirus, இந்தியா, கோவிட், கோவிட் வைரஸ், ஒமைக்ரான், ஒமிக்ரான்,

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ளது. 23 மாநிலங்களில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 560 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 460, டில்லியில் 351, குஜராத்தில் 136, தமிழகத்தில் 117 மற்றும் கேரளாவில் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், நேற்று 27,553 பேருக்கு புதிதாக கோவிட் உறுதி செய்யப்பட்டது. இது, அதற்கு முந்தைய நாளை காட்டிலும் 21 சதவீதம் அதிகம் ஆகும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,48,89,132 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news9,249 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,22,801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் பாதிப்பு காரணாமக 284 பேர் உயிரிழந்ததால், கோவிட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,81,770 ஆனது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜன-202211:00:57 IST Report Abuse
அப்புசாமி கோவிட் ஓமிக்ரான் பரவுச்சுன்னா, நாங்க அப்பவே எச்சிரிச்சோம். மாநில அரசுகள் கட்டுப்படுத்தலன்னு சொல்லி கை கழுவிரும். மாநில அரசுகள் பொதுமக்கள் மாஸ்க் போடலே, ஊட்டுல முடங்கலேன்னு கை கழுவிரும். கொரோனா பரவலேன்னா, பெரியவருக்கு மெடல் குத்த ஒரு கூட்டம் ரெடியா நிக்கும். அவரங்கசீப் தான் கொரோனா பரவலுக்கு காரணம்னு உ.பி ல பேசுவாரு.
Rate this:
Cancel
R Kumar - Triolet,மொரிஷியஸ்
02-ஜன-202214:48:16 IST Report Abuse
R Kumar வெளிநாட்டிளிருந்து வரும் பயணிகளை சரிவர கோவிட் பரிசோதனை செய்யாததே முக்கிய காரணம். அரசியல் வாதிகள் அறிக்கை விடுவதிலும் கோவிட் எண்ணிக்கையை தெரிவிப்பது மட்டுமே அவர்கள் செய்கிறார்கள் .
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
02-ஜன-202210:48:10 IST Report Abuse
Tamilan ஆரம்பம் முதலே, ஒவ்வொரு அலையின் போதும், அந்நியர்களைப் போலவே முன்கூட்டியே பரவலை கன்டுபிடிக்க தவறிவிட்டார்கள். கும்பகர்ணன் போல் தூங்கிவிட்டு பின் அவசரகால சட்டம் போட்டு, விஞ்சானிகளின் மீது பாரத்தை போட்டுவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X