தேசப்பற்று ஸ்லோகம்
ராமனுக்கு அடியவர் என்பதால் அனுமனுக்கு ‛ராமதாசர்' என்று பெயர். அவர் மீது துளசிதாசர் பாடியது அனுமன் சாலீஸா நாற்பது பாடல் கொண்டது. இதைப்பாடினால் கோழையும் தைரியசாமியாக மாறிவிடுவான் என்பர்.

கடலூர் அடுத்த டி.குமராபுரம் காரியசித்தி ஆஞ்சநேயர் கோயில்
ஹிந்தியில் இருந்தாலும் மொழி வேற்றுமையின்றி நாடு முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களால் பக்தியுடன் படிக்கப்படுகிறது. அந்நியப்படையெடுப்பின் போது மக்கள் மத்தியில் பக்தி, தேசப்பற்றை நிலை நிறுத்திய பெருமை இதற்குண்டு.

வெள்ளிக் கவசம்,சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், எல்லீஸ் நகர், மதுரை.
படிங்க... பலன் பெறுங்க...
அனுமனுக்கு ‛சுந்தரன்' என்றொரு பெயருண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி, சொல்லின் செல்வனான அனுமனுக்குச் சிறப்பு சேர்க்கும் விதத்தில் ‛சுந்தர காண்டம் ' என்னும் பகுதியை உருவாக்கினார். ‛சுந்தர காண்டம்' பாராயணம் செய்தால் மனக்குழப்பம் தீரும். மகிழ்ச்சி நிலைக்கும்.

கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திர், ஆஞ்சநேயர்.
‛சுந்தர காண்டத்தை தினம் படித்தால் மருத்துவரால் குணப்படுத்த முடியாத வியாதியும் பறந்தோடும்' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். கர்ப்பிணிகள் சுந்தரகாண்டம் படித்தால், அனுமன் அருளால் நற்குணங்களுடன் குழந்தை பிறக்கும்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வீரஆஞ்சநேயர் கோயி ல்
கைமேல் பலன் கிடைக்க
பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு பகுதிகளைக் கொண்டது ராமாயணம். இதில் சுந்தர காண்டத்திற்கு பெருமை மிக அதிகம். ‛சுந்தரம்' என்றால், ‛அழகு'. தன் மனைவியாகிய சீதையைப் பிரிந்து வருந்திய ராமனுக்கு அனுமன் மூலம் நல்ல செய்தி கிடைத்தது இந்த காண்டத்தில் தான். சொல்லின் செல்வனும் சுந்தரனுமாகிய அனுமனின் வீரதீரங்கள் வெளிப்பட்டது இப்பகுதியில்தான்.

கடலூர் செம்மண்டலம் சார்ந்த ஆஞ்சநேயர் கோயில்
அசோகவனத்தில் தனிமையில் வாடிய சீதைக்கு, ‛‛ கருணையே உருவான ராமர் இலங்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்'' என நல்ல செய்தி கிடைத்தது இந்த காண்டத்தில் தான்.

ஜெயவீர ஹனுமான், ஆவுடைப்பொய்கை
ராமாயணத்தின் இப்பகுதி மந்திரத்தன்மை கொண்டது. இதைப் படிப்பவர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும். சுந்தரகாண்டத்தை படித்தால் துன்பத்தைப் போக்க அனுமன் ஓடி வருவார்.

சிவகங்கை தெப்பக்குளம் ஜெய ஆஞ்சநேயர்
எந்த ஊரு என்ன பேரு

திண்டுக்கல் கோபாலசமுத்திரம் பால ஆஞ்சநேயர்.
அனுமனுக்கு நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், ‛அனுமன், அனுமார்' என்கிறோம். கன்னட மக்கள் ‛ஐயா' என இணைந்து ஹனுமந்தையா' என்கின்றனர். தெலுங்கில் ‛அஞ்சனை மைந்தன்' என்னும் பொருளில், ‛ஆஞ்சநேயலு' என்கின்றனர். மகாராஷ்டிராவில் வாயுதேவனின் மகன் என்பதால், ‛மாருதி' என அழைக்கின்றனர். ‛மாருதம்' என்பதற்கு ‛காற்று' எனு்பது பொருள். வட மாநிலங்களில் ‛மகாவீரர்' எனப்படுகிறார். வீரதீரம் நிறைந்த இவரை மகாவீரர் என்பது பொருத்தம் தானே!

காரைக்குடி பர்மாபஜார் ஜெயவீர ஆஞ்சநேயர்
இஷ்ட தெய்வம் அனுமன்

திண்டுக்கல் வீரஆஞ்சநேயர்.
‛மகாவீரனான அனுமனை உன்இஷ்ட தெய்வமாக்கி கொள். புத்திசாதூர்யம், தொண்டு, தைரியம், தியாகம் போன்றவற்றுக்கு ஒருவரை உருவகப்படுத்தினால் அது அனுமனாகத் தான் இருக்க முடியும். ராமபிரானின் நன்மைக்காகத் தன்னையே தியாகம் செய்ய காத்திருந்த அனுமன் போல அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்யப் பழக வேண்டும்' என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE