முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை ஒரு மாதமாக 141 அடிக்கு மேல் நிலைநிறுத்தி சாதனை

Updated : ஜன 03, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கூடலுார்: முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீர் 1200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு மாதத்திற்கும் மேலாக அணையில் 141 அடிக்கு மேல் நிலை நிறுத்தி சாதனை படைக்கப் பட்டுஉள்ளது.பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 140.90 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 349 கனஅடியாக இருந்தது.தமிழகப் பகுதிக்கு
முல்லை பெரியாறு அணை, நீர்மட்டம், 141 அடி, நிலைநிறுத்தி, சாதனை

கூடலுார்: முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீர் 1200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு மாதத்திற்கும் மேலாக அணையில் 141 அடிக்கு மேல் நிலை நிறுத்தி சாதனை படைக்கப் பட்டுஉள்ளது.

பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 140.90 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 349 கனஅடியாக இருந்தது.தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட 600 கனஅடி நீர் நேற்று காலை முதல் 1200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 7369 மில்லியன் கன அடியாகும்.


latest tamil news



2014 மே 7ல் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் 2014, 2015, 2018, 2021 ஆண்டுகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டி தமிழக விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 2021 தவிர மற்ற ஆண்டுகளில் ஒரு நாள் மட்டும் 142 அடியாக நிலைநிறுத்தப்பட்டது. ஆனால் 2021ல் ஒரு மாதத்திற்கும் மேலாக 141 அடிக்கும் மேலும், 12 நாட்கள் 142 அடி ஆகவும் நிலைநிறுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அணையின் உறுதித் தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜன-202210:56:22 IST Report Abuse
அப்புசாமி சாதனையா? யாரோட சாதனை? அந்த அணையோட தாங்கும் சக்தி. அதுக்கு எதுக்கு யாருக்கோ கிரெடிட் குடுக்கணும்?
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
02-ஜன-202220:43:22 IST Report Abuse
SUBBU இந்த விஷயத்தில் தமிழக அரசை பாராட்டலாம்.
Rate this:
Cancel
anil -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜன-202217:08:23 IST Report Abuse
anil Congratulations to the Government
Rate this:
Balaji - Chennai,இந்தியா
02-ஜன-202217:33:04 IST Report Abuse
BalajiWhich government ஷாமியோவ்? வித்திருப்பாங்க இந்நேரம் இவிங்க இருந்தப்போ இந்த கேசு வந்திருந்தா.. ஏதோ அம்மா இருக்கச்சொல்லோ பொழச்சோம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X