மே.வங்கத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு; பள்ளி, கல்லூரிகள் மூடல்

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கோல்கட்டா: கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி,கல்லூரிகள் நாளை(ஜன.,3) முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் உ.பி., ம.பி., மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், மேற்கு வங்க மாநில தலைமை
மேற்கு வங்கம், கட்டுப்பாடுகள், ஊரடங்கு, கட்டுப்பாடுகள், கோவிட், ஒமைக்ரான்,

கோல்கட்டா: கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி,கல்லூரிகள் நாளை(ஜன.,3) முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் உ.பி., ம.பி., மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில தலைமை செயலர் எச் கே திவேதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

* நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள் மூடப்படும். நிர்வாக பணிகள், 50 சதவீத ஊழியர்களுடன் மட்டும் செயல்படலாம்.

*நீச்சல் குளங்கள், ஸ்பாக்கள், சலூன்கள், அழகு நிலையங்கள், மிருககாட்சி சாலைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்படும்

*அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும். வீட்டில் இருந்து பணிபுரியும் முறை ஊக்குவிக்கப்பட வேண்டும்.

*நிர்வாக கூட்டங்கள் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட வேண்டும்

*வணிக வளாகங்கள், மார்க்கெட்கள் 50 சதவீத மக்களுடன் செயல்படலாம். இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும்.


latest tamil news



*உணவகங்கள், பார்கள், சினிமா தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை வசதியுடன் இரவு 10 மணி வரை செயல்படலாம்

*கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவை அதிகபட்சமாக 200 பேருடன் அல்லது அரங்கில் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் செயல்படலாம்.

*திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை

*இறுதிச்சடங்கில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

*50 சதவீத இருக்கை வசதியுடன் இரவு 7 மணி வரை மட்டுமே உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும்.

*மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் செயல்படும்.


latest tamil news



*இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கும், ஒரே இடத்தில் கூடுவதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

*வரும் 5ம் தேதி முதல் டில்லி மற்றும் மும்பைக்கு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
02-ஜன-202220:38:29 IST Report Abuse
தமிழன் மஹாராஷ்டிராவுல பரவியாச்சுல்ல? அங்கிருக்குற சேரில பரவலை கட்டுப்படுத்த முடியவே முடியாது. அங்கே பரவிட்டா நாடு முழுதும் ஈஸியா பரவிடும்.
Rate this:
Cancel
Raj - Hyderabad,இந்தியா
02-ஜன-202220:22:18 IST Report Abuse
Raj ஓமைகிறான் நைட் 10 டு 5 தான் பரவுதாம். மத்த நேரத்துல பரவாதாம். கூடமா 100 பேர் இருந்தா பரவுமாம் 50 பேர் இருந்தா பரவாதாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X