புவி சுற்றும் புவனிதரன்

Added : ஜன 02, 2022
Share
Advertisement
எல்லைகள் கடந்து இருப்பிடம் மறந்து எண்ணுமிடமெல்லாம் செல்ல வேண்டும். பறவை போல் வாழ வேண்டும். பயணங்கள் பல போக வேண்டும் என்ற கனவுகளுடன் கடல் கடந்து பயணம் செய்கிறார் யுடியூபர் புவனிதரன் 26. இவர் தினமலர் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்...* உங்களை பற்றி ... தஞ்சாவூரில் அம்மாவுடன் வசித்து வருகிறேன். பல நாடுகளுக்கு குறைந்த பட்ஜெட்டில் பயணம் செய்து வீடியோக்களாக
புவி சுற்றும் புவனிதரன்

எல்லைகள் கடந்து இருப்பிடம் மறந்து எண்ணுமிடமெல்லாம் செல்ல வேண்டும். பறவை போல் வாழ வேண்டும். பயணங்கள் பல போக வேண்டும் என்ற கனவுகளுடன் கடல் கடந்து பயணம் செய்கிறார் யுடியூபர் புவனிதரன் 26. இவர் தினமலர் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்...


* உங்களை பற்றி ...


தஞ்சாவூரில் அம்மாவுடன் வசித்து வருகிறேன். பல நாடுகளுக்கு குறைந்த பட்ஜெட்டில் பயணம் செய்து வீடியோக்களாக யூடியூபில் பதிவேற்றி வருகிறேன்.


* குறைந்த பட்ஜெட் பயணம் தேர்ந்தெடுக்க காரணம்


பணம் தான். லட்சங்களில் செலவு செய்து உலகம் சுற்ற எல்லோராலும் முடிவதில்லை. ஆனால் பல இடங்களை சுற்றி பார்க்க ஆசை அனைவருக்கும் இருக்கும். அதனால் தான் குறைந்த செலவில் பயணம் செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.


* பணம் செலவில்லாத தங்கள் பயண ரகசியம் என்ன


எனது முதல் பயணத்தில் மணாலிக்கு சென்றேன். போகும் போதே பணம் செலவழிந்து விட்டது. ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வரை லிப்ட் கேட்டே வந்து சேர்ந்தேன். அதற்கு 12 நாட்கள் ஆனது. அதற்கு பின் அவ்வப்போது லிப்ட் கேட்டு செல்ல துவங்கினேன்.


* பயணத்தில் கிடைத்த நெகிழ்ச்சியான அனுபவம்


லிப்ட் கேட்டு பயணம் செய்யும் போது பயணத்தின் நோக்கம் பற்றி கேட்பார்கள். அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று உபசரிப்பார்கள். அது என்னை நெகிழ்ச்சி அடைய செய்தது. இதுபோல் பல இடங்களில் நடந்துள்ளது.


* எங்கெங்கெல்லாம் பயணம் செய்திருக்கிறீர்கள்


பாலைவனப் பகுதிகள், பனி மலைகள், அடர்ந்த காடுகள், பளபளப்பான கட்டடங்கள் நிறைந்த பகுதிகள், எளிய மக்களை கொண்ட கிராமங்கள், கடற்கரைகள் என இந்தியாவின் 17 மாநிலங்கள், உலகின் 10 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன்.


* பயணத்தில் உணவு எப்படி


அங்குள்ள மக்கள் அன்புடன் அவர்கள் கலாசாரம் சார்ந்த உணவுகளை அளிப்பார்கள். அதை வேண்டாம் என்று மறுக்க முடியாது. தவளை, பட்டுப்புழு என விநோதமான உணவுகளையும் சாப்பிட்டிருக்கிறேன். ஆப்பிரிக்காவில் பழங்குடி மக்களுடன் குரங்கு வேட்டைக்கு சென்று அதன் கறியை சாப்பிட்டிருக்கிறேன். தற்போது தாய்லாந்து செல்ல திட்டமிட்டிருக்கிறேன். அங்கு பாம்பு, முதலை உணவுகளையும் ஒரு கை பார்க்க ஆசை.


* பயணத்தின் போது பயமுறுத்திய சம்பவங்கள்


ராஜஸ்தானில் இரவில் டென்ட் அமைத்து தங்கி இருந்தேன். அங்கிருந்தவர்கள் இது கொள்ளையர்கள் இருக்கும் பகுதி என்று கூறினர். பயத்தில் துாக்கமே வரவில்லை. ஆப்பிரிக்காவில் குரங்கு வேட்டைக்கு சென்ற அடர் வனத்தில் பழங்குடிகள் சகஜமாக உலாவர எனக்கு காட்டு விலங்குகளின் சத்தத்தை கேட்டு அவ்வளவு பயம். பிறகு, கழுதை புலிக்கு உணவு அளிக்கும் ஒரு காணொளியில் என்னை பார்த்து பலரும் நான் தைரியமாக இருந்ததாக கூறினர்.


* பயணத்தில் கற்றுக் கொண்டது


பல மொழி பேசும் மனிதர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் மொழி ஒரு தடையாக இருந்ததில்லை. 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். ஆங்கிலத்திலும் தடுமாறி தான் பேசுவேன். இருப்பினும் நான் என்ன கூற வருகிறேன் என்பதை முன்பின் தெரியாத மக்கள் புரிந்து கொள்வர். பல பிரிவினைகளை கடந்தும் மனிதர்களிடம் இணைப்பு உள்ளதை பயணத்தின் வாயிலாக கற்றேன்.


* உங்களின் கனவு பயண திட்டம்


ரஷ்யாவில் உலகின் குளிரான யாகுட்ஸ்க் பகுதிக்கு செல்ல ஆசை. அங்கு மைனஸ் 50 டிகிரி குளிர் நிலவும். விரைவில் அங்கு செல்லும் கனவு நிறைவேறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X