ஸ்ரீநகர்: எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்ட முயன்ற பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரரை இந்திய ராணுவத்தினர் சுட்டு கொன்றனர்.
இது தொடர்பாக ராணுவ காலாட்படை பிரிவின் மேஜர் ஜெனரல் பென்தர்கள் கூறியதாவது: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கெரன் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர், இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றார். இதனையடுத்து, இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் அந்த வீரர் உயிரிழந்தார். உயிரிழந்த வீரர் முகமது ஷபீர் மாலிக் என தெரியவந்துள்ளது. இறந்த வீரரின் உடல் கைப்பற்றப்பட்டது. ஏகே ரக துப்பாக்கி, வெடிமருந்து, கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பாகிஸ்தான் முயற்சி செய்வது தெளிவாகி உள்ளது. ஹாட்லைன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினரை தொடர்பு கொண்டு உடலை திரும்ப பெற்று செல்லும்படி கூறியுள்ளோம். கடந்த ஆண்டு பிப்., மாதம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது அப்பட்டமாக அம்பலமாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE