உரிய நேரத்தில் விமானம் புறப்பாடு: 8ம் இடத்தில் சென்னை ஏர்போர்ட்

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை:குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்படுவதை உறுதி செய்ததில், சென்னை சர்வதேச விமான நிலையம், உலக அளவில் எட்டாவது இடம் பிடித்து உள்ளது.லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் நிறுவனம் சிரியம். இந்நிறுவனம் விமானத் துறை, விமானங்கள், விமான நிலையங்கள் குறித்த ஆய்வுகள், கட்டுரைகள் மற்றும் தரவுகளை வழங்கி வருகிறது.கடந்த 2021ல், விமான நிறுவனங்கள் மற்றும் விமான

சென்னை:குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்படுவதை உறுதி செய்ததில், சென்னை சர்வதேச விமான நிலையம், உலக அளவில் எட்டாவது இடம் பிடித்து உள்ளது.



latest tamil news




லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் நிறுவனம் சிரியம். இந்நிறுவனம் விமானத் துறை, விமானங்கள், விமான நிலையங்கள் குறித்த ஆய்வுகள், கட்டுரைகள் மற்றும் தரவுகளை வழங்கி வருகிறது.கடந்த 2021ல், விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் செயல்பாடு குறித்த ஆய்வறிக்கையை, இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், 2021ல், சர்வ தேச விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பட்டதில், சென்னை சர்வதேச விமான நிலையம் 89.32 சதவீதத்துடன், 8வது இடம் பிடித்துள்ளது.


latest tamil news



இந்த விமான நிலையத்தில் இருந்து, 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன. அதில், 70 வழித் தடங்களில், 81.90 சதவீத விமானங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன. 28 கோடி இருக்கைகள் என்ற அடிப்படையில், பெரிய விமான நிலையமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் உள்ள இட்டாமி விமான நிலையம், 96.51 சதவீதத்துடன் முதலிடம் பிடித்து உள்ளது.இந்தியாவில், சென்னை சர்வதேச விமான நிலையம் மட்டுமே, குறித்த நேரத்தில் விமானங்களின் புறப்பாட்டை உறுதி செய்ததில் உலக அளவில் இடம் பிடித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.chinnasamy - Chennai ,இந்தியா
03-ஜன-202200:45:05 IST Report Abuse
G.chinnasamy We are proud to be a true Indians and our family of the greatest tamilnadu.
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
02-ஜன-202222:18:39 IST Report Abuse
R KUMAR மனமுவந்து பாராட்டுவோம். விரைவில் முன்னேற்றம் அடைய முயற்சிக்க ஊக்கம் கொடுப்போம்.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
02-ஜன-202221:27:58 IST Report Abuse
Sai சென்னை சர்வதேச விமான நிலையம் மட்டுமே, குறித்த நேரத்தில் விமானங்களின் புறப்பாட்டை உறுதி செய்ததில் உலக அளவில் இடம் பிடித்துள்ளது.இதுதான் தலைப்பாக போட்டிருக்க வேண்டியது நாம் என்னவோ டில்லி தர்பார் போலவே சென்னை ஏர்போட் சுடாலின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக எண்ணிக் கொண்டு குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X