உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் புராதன சிவாலயமாக திகழ்கிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் தொல்லியல் துறை மேற்பார்வையின் கீழ் உரிய ஆலோசனைப்படி பழமை மாறாமல் பழைய கட்டுமான தொழில் நுட்ப உதவியுடன் நந்தி மண்டபம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.சுண்ணாம்பு, சலித்து எடுக்கப்பட்ட சிறு ஆற்றுமணல், கடுக்காய், வெல்லம், பனங்கருப்பட்டி ஆகியவற்றை உரிய விகிதத்தில் கலந்து பூச்சுக்கு தேவையான உரிய பதத்திற்கு வந்தவுடன் அக்கலவையை கொண்டு சிதிலமடைந்த பாறை கட்டுமானத்தின் மீது சிற்ப அலங்கார வேலைப்பாடுகளுடன் பூச்சுப்பணி நடந்து வருகிறது.
நந்தி பிரகார மண்டபம் அந்தக்கால கடற்பாறையின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மரகத நடராஜர் சன்னதிக்கு தரிசனத்திற்காக செல்லும் நுழைவுவாயில் அலங்கார மண்டபத்தின் பக்கவாட்டு கூரை உள்ளிட்ட நான்கு புறங்களிலும் பழமையான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.கோயிலின் வரலாறு, புராண, இதிகாசத்துடன்தொடர்புடைய சித்திரங்கள், நவக்கிரகங்கள்,ராசிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.அவற்றை நவீன தொழில்நுட்பத்தில் பழமை மாறாமல், மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE