சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : ஜன 03, 2022 | கருத்துகள் (4)
Advertisement
இது தான் ஈ.வெ.ரா., பாதையா?க.மூர்த்தி, நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஓசி சோத்துல ஒடம்பை வளர்த்துட்டேன்; மீசை இருப்பதை மறந்து போயிட்டேன்...' என, எம்.ஜி.ஆர்., நடித்த நாடோடி மன்னன் படத்தில் ஒரு பாடல் உண்டு.பக்தர்கள் அடிக்கடி, 'சிவ சிவ, ராம ராம' என்று சொல்வது மாதிரி, தி.மு.க.,வினர், 'இது, ஈ.வெ.ரா., மண்' என முழங்குவர்.காந்தி சொன்ன அறிவுரைகளை, காங்கிரசார் எப்படி
 இது உங்கள் இடம்

இது தான் ஈ.வெ.ரா., பாதையா?
க.மூர்த்தி, நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'ஓசி சோத்துல ஒடம்பை வளர்த்துட்டேன்; மீசை இருப்பதை மறந்து போயிட்டேன்...' என, எம்.ஜி.ஆர்., நடித்த நாடோடி மன்னன் படத்தில் ஒரு பாடல் உண்டு.பக்தர்கள் அடிக்கடி, 'சிவ சிவ, ராம ராம' என்று சொல்வது மாதிரி, தி.மு.க.,வினர், 'இது, ஈ.வெ.ரா., மண்' என முழங்குவர்.
காந்தி சொன்ன அறிவுரைகளை, காங்கிரசார் எப்படி கடைப்பிடிப்பதில்லையோ, அதுபோல, அந்த ஈ.வெ.ரா., சொல்லி இருக்கும் அறிவுரைகளில் ஒன்றைக் கூட,தி.மு.க., தலைவர்களும், தொண்டர்களும் பின்பற்றுவதில்லை.இந்த உலகில் எதுவும் இலவசம் கிடையாது; ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு.'ஓசி'யில் கொடுக்கும் எதற்கும் மதிப்பு இருக்காது என்பது, ஈ.வெ.ரா.,வின் முக்கியமான கொள்கை.
அவரிடம், 'ஆட்டோகிராப்' வாங்க வேண்டுமென்றால், அதற்கு, 5 ரூபாய் கொடுக்க வேண்டும்; புகைப்படம் எடுத்துக் கொள்ள, 100 ரூபாய் கொடுக்க வேண்டும்.இப்படி, அவர் சிறுகச்சிறுக சேர்த்த சொத்துக்களைத் தான், வீரமணி குடும்பம் இரண்டு தலைமுறைகளாக உட்கார்ந்து அனுபவித்து வருகிறது என்பது வேறு விஷயம்.
அந்த ஈ.வெ.ரா.,வின் வழியில் வந்த கழகங்கள் தான், ஆட்சிக் கட்டிலில் ஏறிய உடன், மக்களுக்கு இலவசத்தை அள்ளிக் கொடுத்து வருகின்றன.சரி... அந்த அளவுக்கு அரசு கருவூலத்தில் செல்வம் நிரம்பி வழிகிறதா என்றால், அதுவும் இல்லை; எல்லாம், உலக வங்கியிடம் கடன் வாங்கி செயல்படுத்தப்படுகின்றன.மாணவ-ர்களுக்கு வழங்கும் இலவச 'பஸ் பாஸ்' நடைமுறையால், போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது.
பேருந்தில் மாணவர்கள் செய்யும் அட்டகாசத்தால், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். மாணவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய காலத்தில், போக்குவரத்து கழகம் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை; அதன் ஊழியர்களும் மன உளைச்சல்அடைந்தது இல்லை.மாணவர்கள் யாரும் பேருந்தில் தொங்கியபடி, குரங்கு வித்தை காட்டியதில்லை.
இன்று பொறுப்பற்ற முறையில் வளரும் மாணவ- - மாணவியர் எதிர்காலத்தில் எப்படி இருப்பர்? இவர்களை தான், 'நாட்டின் வருங்கால துாண்கள்' என்று நாம் கதைத்து கொண்டிருக்கிறோம். இப்படி எல்லாவற்றையும், 'ஓசி'யில் கொடுக்கச் சொல்லி தான், ஈ.வெ.ரா.,அறிவுறுத்தினாரா... இது தான் அவர் வகுத்துக் கொடுத்த பாதையா?
கழகங்களின் ஆட்சி தொடர்ந்தால்...
எஸ்.பிச்சுமணி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்பெல்லாம் நரிக்குறவர்கள், பிச்சையெடுத்து தான் சாப்பிடுவர். இரு கழகங்களும் மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து கோலோச்சிய, 55 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றம் என்னவென்றால், நரிக்குறவர் யாரும் இப்போது பிச்சைஎடுப்பதில்லை.
அவர்கள் கோவில் வாசலில் பாசிமணி, ஊசி, மணிமாலை கடை பரப்பி விற்பனை செய்கின்றனர். பலர் கல்வி கற்று, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்றனர். ஆனால், அந்த கழகங்கள் தான், தமிழக மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றி விட்டன.தமிழக அரசு வழங்கும், 500 ரூபாய்க்குள் அடங்கும் அந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு பைக்காக, மக்களை ஏங்க வைத்து விட்டன.
இயற்கை சீற்றம், விபத்து ஆகியவற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு, அரசு நிவாரண நிதியும், உதவிப் பொருட்களும் வழங்க வேண்டும்; அது அரசின் கடமை. அவற்றை மறுக்காமல் வாங்கிக் கொள்வது, மக்களின் உரிமை. ஆனால், ஆண்டுதோறும் வரும் ஒரு பண்டிகையை, அரசு தரும் பரிசுத் தொகுப்பு பையை வாங்கித் தான் கொண்டாட வேண்டும்என்ற நிலையில் மக்களை வைத்திருப்பது, காலக் கொடுமை! அது தான், கழக அரசுகளின் 'சாதனை!'
தன்மானமும், சுயமரியாதையும் உள்ள தமிழக மக்கள், அந்த பரிசுப் பை வாங்க ரேஷன் கடை முன் நிற்பதற்காக வேதனைப்படுவதில்லை; மாறாக, சந்தோஷப்படுகின்றனர்.அந்த அளவுக்கு கழகங்களின், 'பகுத்தறிவு' பிரசாரம், மக்களின் மூளையை மழுங்க வைத்திருக்கிறது.
நிர்வாகத்தில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாமல், நாளொரு பொதுக் கூட்டமும், பொழுதொரு திட்டத்தையும் அறிவித்து கொண்டிருக்கும் இந்த தி.மு.க., அரசு, தற்போது பொங்கலுக்கு மட்டும் தான் மக்களை பிச்சை எடுக்க வைத்துள்ளது.இன்னும் இரு முறை கழகங்களின் ஆட்சியேதொடர்ந்தால், தமிழர்கள் அனைவரையும் அன்றாடம் பிச்சை எடுக்க வைத்து விடும்.
ஆளுங்கட்சியே இப்படி செய்யலாமா?
ஆர்.கணேசன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
இந்தியா உட்பட, 100க்கும் மேற்பட்ட நாடுகளில், 'ஒமைக்ரான்' வேகமாக பரவி வருகிறது.மத்திய அரசின் சுகாதாரத் துறை,'கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்' என்று, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
டில்லி, கர்நாடகா மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாக இருக்கிறது.கோவை 'கொடீசியா' மைதானத்தில் தி.மு.க.,வின், 'பூத் ஏஜன்ட்' கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் முதல்வரின் மகனும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி பங்கேற்றுள்ளார்.
இது கட்சிக் கூட்டமா அல்லது மாநாடா என்பது போல, தி.மு.க.,வினர் ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர்.இதில் பெருமை ஏதும் இல்லை. நோய் பரவல் அதிகரித்து வருகிறது என்ற எண்ணம் கொஞ்சம் கூட, ஆளும் தி.மு.க., அரசுக்கு இல்லை என்பதையே, இந்த கூட்டம் வெளிச்சமிட்டு காட்டிஉள்ளது.ஆளுங்கட்சியான தி.மு.க.,வே, இப்படி பொறுப்பின்றி செயல்படுவது, கண்டனத்திற்கு உரியது.இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக, மக்கள் பல விதங்களில் துயரப்பட்டனர். வேலை வாய்ப்பு இல்லாமல், பலரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
பெரும் பொருளாதார சரிவை, நாடு சந்தித்தது.மீண்டும் ஊரடங்கு என்பதை, மக்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.அரசியல் தலைவர்களே... உங்கள் கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றால், தயவு செய்து காணொலி காட்சி வழியாக அவர்களை சந்தியுங்கள்.Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-ஜன-202219:42:53 IST Report Abuse
D.Ambujavalli எங்கே, கூட்டப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடுவானத்தை எட்டாமல் இருந்தால் அந்த தொகுதியின் 'மாண்புமிகு' அமைச்சரும், எம் எல் ஏவும் கட்சித்தலைமை, தவிர, தலைமையின் தலைமையாக உள்ள கிச்சன் காபினெட்டினால் கட்டம் கட்டப்பட்டு, என்னென்ன சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்துதான் கூட்டியுள்ளார்கள் கொரானா,ஓமைக்றான் எல்லாம் பரவ இது என்ன கோயில்களா, கல்யாண, மரண நிகழ்வுகளா? சும்மா விளையாடுங்கப்பா, இன்னும் ஒரு சில ஆயிரம்பேராவது உங்கள் கைங்கர்யத்தால் சாக வேண்டாமா? '
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
03-ஜன-202213:15:07 IST Report Abuse
raja நல்ல கருத்து தான் ஆனால் @எஸ்.பிச்சுமணி... சொன்ன நீங்கள் பொங்கலை மட்டும் சொல்லி இருக்கீங்களே... முஸ்லீம்களுக்கு ரம்ஜானுக்கு காஞ்சி ஊத்த இலவச அரிசி, மெக்கா மெதினா மற்றும் கிருத்துவர்கள் ஜெருசலேம் போவ செலவுக்கு விமான டிக்கெட்டிலிருந்து சாப்பிட முதல் கொண்டு எல்லா செலவுக்கும் பணம் கொடுப்பது என்பவற்றையும் சேர்த்து சொல்லி இருந்தால் உங்கள் மத சார்பின்மை நடுநிலைமை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்...
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
03-ஜன-202211:11:31 IST Report Abuse
தமிழன் //நோய் பரவல் அதிகரித்து வருகிறது என்ற எண்ணம் கொஞ்சம் கூட, ஆளும் தி.மு.க., அரசுக்கு இல்லை// - இரண்டாவது அலையே அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X