சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 03, 2022
Advertisement
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழகத்தில் பரவி வரும், 'ஒமைக்ரான்' தொற்றால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் உடல் நலன் கருதி பள்ளி, கல்லுாரிகளுக்கு பொங்கல் விழா முடியும் வரை, விடுமுறை அளிக்க வேண்டும்.ஏற்கனவே, ஓராண்டுக்கும் மேல்பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. இப்போது தான் கொஞ்சம்
 பேச்சு, பேட்டி, அறிக்கை

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழகத்தில் பரவி வரும், 'ஒமைக்ரான்' தொற்றால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் உடல் நலன் கருதி பள்ளி, கல்லுாரிகளுக்கு பொங்கல் விழா முடியும் வரை, விடுமுறை அளிக்க வேண்டும்.
ஏற்கனவே, ஓராண்டுக்கும் மேல்பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. இப்போது தான் கொஞ்சம் செயல்படுகின்றன. மேலும் மூடினால் மாணவர்களின் படிப்பு பாழாகி விடுமே!
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனர் சேதுராமன் அறிக்கை: 'ஒமைக்ரான் தொற்று, மே இறுதி வரை கடுமையாக பரவும், 'சுனாமி' போல கொத்து கொத்தாக மக்களை பாதிக்கும்' என, உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. எப்போது தேர்தல் நடத்தினாலும், பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்கும் காலமாக, இன்றைய ஜனநாயகம் இருக்கும் போது, ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். எனவே, வீண் பிடிவாதம் பிடித்து, தேர்தல் நடத்தி, மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம்.
இது தான் எதார்த்தம். இந்த நேரத்தில் தேர்தலை நடத்தி, ஒமைக்ரானை மேலும் பரவ விட வேண்டாமே!
தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை: சென்னையில் தொடரும் மழை, வெள்ள சேதத்தை கட்டுப்படுத்த, முக்கிய துறைகளை பிற நகரங்களுக்கு மாற்றி, சென்னை நகரில் மக்கள் அடர்த்தியை குறைக்க வேண்டியது அவசியம். கல்வித்துறையை நெல்லைக்கு, விவசாயத் துறையை தஞ்சைக்கு, சட்டசபையை மதுரைக்கு மாற்ற வேண்டியது அவசியம்.நல்ல அறிவுரை தான். இப்படித் தான், எம்.ஜி.ஆர்., அப்போதே திட்டமிட்டார். ஆனால், அதை அப்போதே, 'துக்ளக் தர்பார்' என கிண்டல் செய்தனர், தி.மு.க.,வினர். எனவே, இந்த அறிவுரை முதல்வர் காதுகளுக்கு சென்றாலும் செய்யப்போவதில்லை!
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: உணவகங்கள், திரையரங்குகள் போன்றவற்றில் கொரோனா கட்டுப்பாடுகள் வரவேற்கத்தக்கதே. அதே நேரத்தில், அரசியல் கட்சிகளும் இதை பின்பற்ற வேண்டும்;பொறுப்போடும் நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக, சட்டத்தை தன் கையில் வைத்துள்ள ஆளும் கட்சிகளுக்கு இதை அறிவுறுத்த வேண்டும். எல்லா மாநிலங்களிலும் ஆளும் கட்சிகள் தான், கொரோனா கெடுபிடிகளை மீறுகின்றன. அது முதலில் சரி செய்யப்பட வேண்டும்!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:பெட்ரோல் விலையை குறைப்பதாக, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. தி.மு.க., தான் தேர்தல் அறிக்கையில் சொன்னது. ஆனால், குறைக்கவில்லை.
இதைத் தான், 'சொன்னதைத் தான் சொல்வோம்; சொல்வதைத் தான் செய்வோம்' என, 'உல்டா'வாக கூறுகின்றனரோ?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X