சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

எங்கள் மக்கள் எளிதில் மாற மாட்டார்கள்!

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (6)
Advertisement
இன்னமும் மூட நம்பிக்கையில் முடங்கிக் கிடக்கும் நரிக்குறவர் நாடோடி பழங்குடியின சமூகத்திலிருந்து தனித்து மிளிர்வது பற்றி, சென்னை ஆவடியை சேர்ந்த சுனிதா:படிப்பு நம் வாழ்க்கைக்கான அடிப்படை அனுபவங்களை கற்றுக் கொடுத்தாலும், நல்ல வேலை தான் எல்லா வகையிலும் நம் வாழ்க்கையை முழுமையா மாத்தும். ஊசி, பாசி விற்குற வேலைக்கு நாகரிகமான டிரஸ் உடுத்துறது சரி வராதுனு எங்கள் மக்கள்
சொல்கிறார்கள்

இன்னமும் மூட நம்பிக்கையில் முடங்கிக் கிடக்கும் நரிக்குறவர் நாடோடி பழங்குடியின சமூகத்திலிருந்து தனித்து மிளிர்வது பற்றி, சென்னை ஆவடியை சேர்ந்த சுனிதா:

படிப்பு நம் வாழ்க்கைக்கான அடிப்படை அனுபவங்களை கற்றுக் கொடுத்தாலும், நல்ல வேலை தான் எல்லா வகையிலும் நம் வாழ்க்கையை முழுமையா மாத்தும். ஊசி, பாசி விற்குற வேலைக்கு நாகரிகமான டிரஸ் உடுத்துறது சரி வராதுனு எங்கள் மக்கள் நினைக்கிறாங்க.

இப்போ எல்லாருக்கும் படிப்பு இலவசமா கிடைக்குது. எங்க சமூகத்துல காலேஜ் படிக்குறவங்களோட எண்ணிக்கை அதிகரிச்சாலும், அவங்கள்ல யாருக்குமே நல்ல வேலை கிடைக்கிறதேயில்ல. அதனால, வேண்டா வெறுப்பா மறுபடியும் ஊசி, பாசி விற்கவே போறாங்க.என் பெற்றோர் ஊசி, பாசி விற்கிற தொழில் செஞ்சதால, நாங்க நாடோடி வாழ்க்கை தான் வாழ்ந்தோம். நிரந்தர வீடு கிடையாது. மரத்தடியில குடில் அமைச்சு தான் வசிச்சோம்.

சமூக மக்களை ஆதிக்க ஜாதியினர்ல பலரும் ரொம்பவே மட்டம் தட்டியும், கிண்டல் பண்ணியும் பேசுவாங்க. அதனால, சின்ன வயசுல வெளியுலகத்துடன் அதிகம் கலக்காமலேயே இருப்பேன். ஸ்கூல் முடிச்சுட்டு வந்ததும் அம்மாவுக்கு உதவியா ஊசி, பாசி வியாபாரம் செய்வேன். அப்பாவுக்கு நாங்க மொத்தம் எட்டு பிள்ளைகள்; நான் கடைக்குட்டி. மத்த ஏழு பேரும் சரியா படிக்கல. நானாச்சும் படிச்சு கவர்ன்மென்ட் வேலைக்குப் போகணும்னு அவர் ஆசைப்பட்டார். படிப்பு தான் நம்ம சமூகத்தை மேம்படுத்தும்னு அனுபவத்துல உணர்ந்தேன்.

நார்மல் காலேஜ் படிக்க முடியாததால, பிளஸ் 2 முடிச்சதும் டிப்ளமா காலேஜ் போனேன். அங்க கேலி, கிண்டல் அதிகமாகவே, பொறுமையை இழந்து காலேஜ் போறதை நிறுத்திட்டேன். நான் நல்லா படிப்பேன். அதனால, எங்க காலேஜ் சேர்மன் ஐயா, 'நீ காலேஜ் வராட்டியும் பரவால்ல. எக்சாம் எழுத மட்டுமாச்சும் வா'ன்னு சொல்லி ஊக்கம் கொடுத்தார்.

டிப்ளமா முடிச்சதும் ரொம்பவே முயற்சி பண்ணி, மின்சார வாரியத்துல, 'அப்ரென்டிஸ்' வேலை வாங்கினேன்.வேலை செஞ்சுகிட்டே, இன்ஜினியரிங் படிச்சேன். எங்க சமூகத்துல பெண்கள் இரவு நேரத்துல வெளியிடங்களுக்கு அதிகம் போக மாட்டோம். எனக்குத் தெரிஞ்சு எங்க சமூகத்துலயே ஈவினிங் காலேஜ்ல படிச்ச முதல் நபர் நான் தான்னு நினைக்கிறேன்.

இன்ஜினியரிங் படிப்பு முடிச்சதும் உதவிப் பொறியாளரா, 'புரமோஷன்' கிடைச்சது. கவர்ன்மென்ட் வேலைக்குப் போனாலும் இந்தக் கட்டுப்பாடுகள் எனக்கும் பொருந்தும். பழைமையில ஊறிப்போன சமூக மக்களை அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியாது. எனினும் மாறி வருகின்றனர்.

என் கணவர் வெளிவேலைக்கு போறார். ஆபீஸ்லேருந்து நான் வீட்டுக்கு வர தாமதமானா, சமையல், குழந்தைகளைக் கவனிச்சுக்குவார். இப்போ நான் நல்லா சம்பாதிக்கிறேன். எக்காரணம் கொண்டும் என் ரெண்டு பிள்ளைகளும் ஊசி, பாசி விற்கிற தொழில் பக்கம் வந்திடக் கூடாதுன்னு, அவங்க படிப்புக்கும், வளர்ச்சிக்கும் அதிக கவனம் கொடுக்கிறேன்!

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
03-ஜன-202219:16:16 IST Report Abuse
Murthy வாழ்த்துக்கள். கல்வியே அனைத்திற்கும் மூலதனம். ஒரு அமைப்பை உருவாக்கி உங்களோடு இருப்பவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குங்கள்.
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
03-ஜன-202218:32:31 IST Report Abuse
krishnamurthy வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
RUPA - KOLKATA,இந்தியா
03-ஜன-202217:11:32 IST Report Abuse
RUPA அம்மா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X