ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: நம் நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் கடந்த மாதம் தமிழகத்தின் குன்னுார் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த விபத்து குறித்து விசாரிக்க, ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, விபத்தில் சிக்கிய

புதுடில்லி: நம் நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் கடந்த மாதம் தமிழகத்தின் குன்னுார் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.



latest tamil news




இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த விபத்து குறித்து விசாரிக்க, ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் 'கறுப்பு பெட்டி'யில் பதிவான தகவல்களையும் ஆராய்ந்து அறிக்கை தயாரித்துள்ளது.

இந்த அறிக்கை அடுத்த ஐந்து நாட்களில் விமானப்படை தலைமை தளபதி சவுத்ரியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்து மத்திய அரசு தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.


latest tamil news


இந்நிலையில் அந்த விசாரணை அறி
க்கை குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப மற்றும் இயந்திர கோளாறுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், மோசமான வானிலை காரணமாகவே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகவும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandran - madurai,இந்தியா
05-ஜன-202209:07:17 IST Report Abuse
chandran அன்று வானிலை மோசமாக இருந்தது என்று சாமான்ய மனிதர்கள் எல்லாருக்கும் தெரியும்.. The report should pin point what caused the crash. சும்மா பொத்தாம் பொதுவாக வானிலை மோசமாக இருந்தது என்று சொல்ல கூடாது..
Rate this:
Cancel
chandran - madurai,இந்தியா
05-ஜன-202209:07:17 IST Report Abuse
chandran Please don't repeat the same comment
Rate this:
Cancel
03-ஜன-202212:04:27 IST Report Abuse
அப்புசாமி முத நாளே ஹெலிகாப்டர் சோதனை ஓட்டமெல்லாம் உட்டிருக்காங்க. தமிழக வானிலை மையமும் எந்த வித பாதகமான அறிவிப்பையும் அந்தப் பகுதிக்கு அறிவிச்சுதான்னு தெரியலை. ஒன்றிய அரசு எல்லாத்துக்கும் நேரு தான் காரணம்னு சொல்லற மாதிரி இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X