பொருளாதாரத்தில் பின்தங்கியோர் வருமான வரம்பில் மாற்றமில்லை! | Dinamalar

பொருளாதாரத்தில் பின்தங்கியோர் வருமான வரம்பில் மாற்றமில்லை!

Updated : ஜன 03, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (14) | |
புதுடில்லி:'பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆண்டு வருவாய் உச்ச வரம்பை 8 லட்சம் ரூபாயாகத் தொடர நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில்,

புதுடில்லி:'பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆண்டு வருவாய் உச்ச வரம்பை 8 லட்சம் ரூபாயாகத் தொடர நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.latest tamil newsமுதுகலை மருத்துவப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், கடந்தாண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது.


8 லட்சம் ரூபாய்


இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அதை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருவாய் உச்ச வரம்பை 8 லட்சம் ரூபாயாக நிர்ணயித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பியது.

இதையடுத்து இந்த வரையறையை மறுஆய்வு செய்வதாக நவ.,ல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 6ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இந்த வரையறையை மறுஆய்வு செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. முன்னாள் மத்திய நிதித் துறைச் செயலர் அஜய் பூஷண் பாண்டே, ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., எனப்படும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் உறுப்பினர் செயலர் வி.கே. மல்ஹோத்ரா, மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் டிச., 31ல் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அதனடிப்படையில் மத்திய அரசின் சார்பில் புதிய பிரமாணப் பத்திரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:நிபுணர் குழுவினர் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, விரிவாக ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். பொருளாதாரத்தில் க்ஷபின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கான ஆண்டு வருவாய் உச்ச வரம்பு, 8 லட்சம் ரூபாயாக தொடர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.க்ஷ

குடும்பத்தின் மொத்த வருவாய், 8 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலும், 5 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலம் இருந்தால், அவர்களை பொருளாதாரத்தில் பின்தங்கியவராக கருத முடியாது.அதே நேரத்தில் குறிப்பிட்ட சதுர அடிக்கு மேற்பட்ட வீடு உள்ளோர் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற விதியை ரத்து செய்யவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஓ.பி.சி., பிரிவினரில், 'கிரீமி லேயர்' எனப்படும் உயர் வருவாய் உள்ளவர்களுக்கான நடைமுறைகளை விட, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவினருக்கான வருவாய் உச்ச வரம்பு மிகவும் கடுமையாக பின்பற்றப்படுகிறது.ஓ.பி.சி., பிரிவினரில், முந்தைய மூன்றாண்டுகளுக்கான வருவாய் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, முந்தைய ஆண்டுக்கான வருவாய் மட்டுமே கணக்கில்எடுத்துக்கொள்ளப்படும்.
அதேபோல், விவசாயம் உள்ளிட்ட மற்ற பாரம்பரிய வருவாய், ஓ.பி.சி., பிரிவினருக்கான
வருவாயில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதே நேரத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அனைத்து வருவாயும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை 2019ல் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.

முதுகலை மருத்துவப் படிப்பில் தற்போதுதான் அறிமுகம் செய்யப்படுகிறது. மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் புதிய மாற்றங்களை செய்வது நிர்வாக ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும். மாணவர்களுக்கும் பலன் கிடைக்காது.


latest tamil newsமருத்துவப் படிப்பு

நிபுணர் குழுவின் பரிந்துரைகளை எப்போதிலிருந்து அறிமுகம் செய்வது என்ற கேள்வி எழுகிறது. சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்க, தன் பரிந்துரையை அடுத்த ஆண்டில் இருந்து நிறைவேற்றலாம் என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.அதனால் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X