தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Added : ஜன 03, 2022 | |
Advertisement
கோவை-''கோவை மாநகராட்சியில், குப்பை அள்ளும் வாகனங்கள் பயன்பாடு மற்றும் குப்பை தொட்டி கொள்முதலில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.கோவை மாநகராட்சி யில், 3.18 கோடி மதிப்பில் தார்ச் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று துவக்கி வைத்தார்.பின் அவர் கூறியதாவது:மாநகராட்சி சாலைகளை பராமரிக்கவும், புதிய

கோவை-''கோவை மாநகராட்சியில், குப்பை அள்ளும் வாகனங்கள் பயன்பாடு மற்றும் குப்பை தொட்டி கொள்முதலில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கோவை மாநகராட்சி யில், 3.18 கோடி மதிப்பில் தார்ச் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று துவக்கி வைத்தார்.பின் அவர் கூறியதாவது:மாநகராட்சி சாலைகளை பராமரிக்கவும், புதிய தார்ச் சாலைகள் அமைக்கவும், 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள், விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கடந்த ஆட்சியில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் புதுப்பிக்கப்படவில்லை; பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. குப்பை தொட்டி கொள்முதல் மட்டுமின்றி, குப்பை அள்ள ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் வாகனங்கள், மாநகராட்சி வாகனங்கள் பயன்பாடு உள்ளிட்டவற்றில், நிறைய தவறுகள் நடந்துள்ளன. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மின் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி., கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X