தேசியவாதியாக இல்லாத ஸ்டாலின் பிரதமராக முடியாது: பா.ஜ., நாராயணன்

Updated : ஜன 03, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (142)
Advertisement
சென்னை : 'தேசியவாதியாக இல்லாத ஸ்டாலின், நாட்டின் பிரதமராக முடியாது' என, திருமாவளவனுக்கு தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.'குஜராத் முதல்வராக இருந்த மோடி, நாட்டின் பிரதமராக முடியும் என்றால், முதல்வர் ஸ்டாலின் ஏன் பிரதமராக முடியாது' என, திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தார். அவருக்கு பதிலடி தரும் வகையில், நாராயணன் திருப்பதி
Narayanan Thirupathy,BJP,MK Stalin,Stalin,Bharatiya Janata Party,DMK,ஸ்டாலின்

சென்னை : 'தேசியவாதியாக இல்லாத ஸ்டாலின், நாட்டின் பிரதமராக முடியாது' என, திருமாவளவனுக்கு தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

'குஜராத் முதல்வராக இருந்த மோடி, நாட்டின் பிரதமராக முடியும் என்றால், முதல்வர் ஸ்டாலின் ஏன் பிரதமராக முடியாது' என, திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தார். அவருக்கு பதிலடி தரும் வகையில், நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம்; தவறில்லை. ஆனால், அவர் ஒரு தேசியவாதியாக இருக்க வேண்டும். பிரிவினைவாத தீய சக்திகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது.


latest tamil news


இந்த தேசத்தை நேசிக்க வேண்டும்; கலாசாரத்தை மதிக்க வேண்டும்; ஊழல் சிந்தனையற்று இருக்க வேண்டும். தேச விரோத தீய சக்திகளோடு உறவு கொள்ளாதவராக இருக்க வேண்டும். எந்த ஒரு மதத்தையும் வெறுக்காமல் இருக்க வேண்டும். பெரும்பான்மை ஹிந்துக்களின் வாழும் முறையான சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்களாக இருக்க முடியாது.

இவை அனைத்தும் ஸ்டாலினிடம் இல்லாததால், அவர் பிரதமராக முடியாது. மோடியை தவிர பிரதமராக யாரையும் ஏற்க, நாட்டு மக்கள் தற்போது தயாராக இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
03-ஜன-202221:05:31 IST Report Abuse
Rajagopal ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதம மந்திரி ஆவதற்கு உரிமை இருக்கிறது. அவரகளது தனிப்பட்டக் கருத்து எதுவாக இருந்தாலும், அவர்கள் தகுதியற்றவர்கள் என்று சொல்ல முடியாது. தேச விரோதத்தில் குற்றம் செய்து, பிடி பட்டு, ஊர்ஜிதம் செய்யப்பட்டு, தண்டனை அடைந்து, பின்னும் கொள்கையை மாற்ற மாட்டேன் என்று ஒருவர் இருந்தால், அவரை பிரதமராக்கட் கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிடலாம். அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. மக்கள் தேர்ந்தெடுத்தால் அதை மீறி ஜனநாயகத்தில் எதுவும் இல்லை.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜன-202219:45:23 IST Report Abuse
Bhaskaran கொஞ்ச எம்பிகளை வச்சிருந்த தேவகவுடா பிரதமர் ஆகவில்லையா .சப்போர்ட் இல்லாத குஜ்ரால் பிரதமர் ஆனார் .மக்கள் ஆட்சியில் யார்வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம்
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜன-202219:41:25 IST Report Abuse
Abdul Aleem இப்படி தான் சி எம் ஆகா மாட்டாருன்னு சொன்னீங்க எங்கள் தளபதி சி எம் ஆகிட்டாரு இப்ப பி எம் ஆகா மாட்டேன்னு சொல்றீங்க பி எம் ஆகவும் வந்திடுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X