அரசு விழாவில் சினிமா விளம்பரத்தால் சர்ச்சை

Updated : ஜன 03, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
மாமல்லபுரம்: மாமல்லபுரம் நாட்டிய விழாவில், திரைப்பட குழுவினர் பங்கேற்று, பட வெற்றிக்கு விளம்பரப்படுத்திய சமபவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மாமல்லபுரத்தில், டிசம்பர் 23 முதல் நாட்டிய விழா நடத்தப்படுகிறது. தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் இவ்விழா, இம்மாதம், 23 வரை தொடர்ந்து நடக்கிறது.விழாவில், தினமும் மாலை 5:30 - இரவு 8:30 மணி வரை, பாரம்பரிய கிராமிய

மாமல்லபுரம்: மாமல்லபுரம் நாட்டிய விழாவில், திரைப்பட குழுவினர் பங்கேற்று, பட வெற்றிக்கு விளம்பரப்படுத்திய சமபவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாமல்லபுரத்தில், டிசம்பர் 23 முதல் நாட்டிய விழா நடத்தப்படுகிறது. தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் இவ்விழா, இம்மாதம், 23 வரை தொடர்ந்து நடக்கிறது.



latest tamil news




விழாவில், தினமும் மாலை 5:30 - இரவு 8:30 மணி வரை, பாரம்பரிய கிராமிய கலைகள் மற்றும் நாட்டியங்கள் நிகழ்த்தப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு, லக் ஷ்மண் ஸ்ருதி இசை நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு இடையே, வேலன் திரைப்பட இயக்குனர், கதாநாயகன் - நாயகி, தயாரிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொருவரும் பேசி, பட வெற்றிக்காக, பார்வையாளர்களிடம் விளம்பரபடுத்தினர்.


latest tamil news




அரசு விழாவில், தனியார் திரைப்பட குழுவினரின் இந்நிகழ்வு, சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஒருபுறமிருக்க, விழா பகுதியை ஒட்டியுள்ள கடற்கரையில், கொரோனா தொற்று தடுப்பிற்காக பயணியர் கூட தடைவிதிக்கப்பட்டது. விழாவிலோ, பட குழுவினரை காண, நடிகருடன் 'செல்பி' எடுக்க என, ரசிகர் கூட்டம் திரண்டனர். இதனால், கொரோனா விதிகள் காற்றில் பறந்தன.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜன-202219:25:33 IST Report Abuse
Bhaskaran Aalsum katchiyin allakai nadigargal
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
03-ஜன-202216:22:56 IST Report Abuse
Samathuvan இன்றைய சூழ்நிலையில் சினிமா என்பது நம் எல்லாத்துறைகளிலும் புகுந்துவிட்டது. இந்த நாட்டியம் என்பதும் சினிமாவின் ஒரு அங்கமே, இது ஒன்றும் புதிதல்ல இதில் சர்ச்சை என்பது வெறும் கண்துடைப்பு.
Rate this:
இந்து. இந்தியா. இந்துஸ்தான்நாட்டியம் என்பது சினிமாவின் ஒரு அங்கமா??? டுமீளர்களின் மூளை எவ்வளவு மலுங்கிவிட்டது என்பதற்கு நீரும் ஒரு சாட்சி!...
Rate this:
Gopi - Chennai,இந்தியா
03-ஜன-202219:37:00 IST Report Abuse
Gopiஅடப்பாவி. சுத்தமா தமிழன் அவுட்டு. பூட்ட கேஸ். மை காட். சினிமா சாராயம் இலவச சோறு. நல்ல வருவீங்க....
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
04-ஜன-202206:14:21 IST Report Abuse
Venkatesh@சமத்துவன் - இவ்வாறு உன்னை கூறிக்கொண்டு ஒன்றும் தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கும் நீ நாட்டுக்கே கேடு....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
03-ஜன-202216:22:41 IST Report Abuse
sankaseshan சினிமா காரனுங்க நடத்துற ஆட்சியில் வேறே என்னத்த எதிர்பார்க்க முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X