புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்த உறுதி ஏற்போம்: முதல்வர் ஸ்டாலின்

Updated : ஜன 03, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை: ஒமைக்ரான் என்னும் புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்த உறுதி ஏற்போம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை சைதாபேட்டை உள்ள பள்ளியில் துவக்கி வைத்தார். இத்திட்டம் மூலம் கோவாக்சின் தடுப்பூசியை தமிழகத்தில் 33 லட்சம் சிறார்களுக்கு ஒருமாதத்தில் போட
Tamilnadu, CM, Stalin, Omicron, Vaccine, Covid, Vaccination, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், ஒமைக்ரான், தடுப்பூசி, புதிய வைரஸ்

சென்னை: ஒமைக்ரான் என்னும் புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்த உறுதி ஏற்போம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை சைதாபேட்டை உள்ள பள்ளியில் துவக்கி வைத்தார். இத்திட்டம் மூலம் கோவாக்சின் தடுப்பூசியை தமிழகத்தில் 33 லட்சம் சிறார்களுக்கு ஒருமாதத்தில் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: ஒமைக்ரானில் இருந்து நம்மை தடுக்கும் கேடயம் முகக்கவசம் என்பதால் அனைவரும் அணிய வேண்டும்.


latest tamil newsதமிழகத்தின் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில் ஒமைக்ரான் மிரட்டத் தொடங்கியுள்ளது. கொரோனா அதிகரித்து வருவதால் மாணவ, மாணவிகள் மிகவும் பாதுகாப்புடன் கவனமாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் குறைந்த அளவே இருந்தாலும், அது மிகவும் வேகமாக பரவி வருவதை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அன்போடு, மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

தடுப்பூசிகள், நோய் எதிர்ப்பை தொடர்ந்து அளித்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இறப்பு விகிதம் குறைவாகதான் இருக்கிறது. புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்த உறுதி ஏற்போம். அனைத்திலும் தமிழகம் முதலிடத்தில் இருப்பதைபோல், நோயில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் என்ற பெயரையும் தமிழகம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
03-ஜன-202219:35:00 IST Report Abuse
g.s,rajan The Government itself cheats the people then there is nothing to speak or write. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
03-ஜன-202216:09:35 IST Report Abuse
Thiagarajan Kodandaraman கருப்பு பலூன் மற்றும் கருப்பு குடி கருப்பு சட்டை அணிந்து ஓட விடலாம் கோ பேக் சொல்வது சகஜம் தானே
Rate this:
Cancel
03-ஜன-202215:38:56 IST Report Abuse
ஆரூர் ரங் உடன்பருப்பே😎 . நாங்கள் கொடியசியாவில் கூட்டம் கூட்டியதால் கொரோனா பரவுவதாக எதிரணியினர் புரளி கிளப்பி விடுகின்றனர். உண்மை அதுவல்ல என சுட்டிக்காட்ட விழைகிறேன். ஆல்கஹால் எல்லா😝 கிருமிகளையும் கொல்லவல்லது என்பதால் அங்கு கூடியிருந்த உடன் பருப்புக்களுக்கு பிரியாணியுடன் ஆல்கஹால் வழங்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆக ஆக அங்கு கொரோனா பரவியிருக்க வாய்ப்பேயில்லை . இருவகைக் 😉கிருமிகள் ஒரே இடத்தில் இருக்க முடியாதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X