ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ‛டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
தென் ஆப்ரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றிப் பெற்றதை அடுத்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 2வது போட்டி ஜோகன்ஸ்பர்க்கில் இன்று (ஜன.,03) துவங்கியது.

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதுகுவலி காரணமாக போட்டியிலிருந்து விலக, லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ‛டாஸ்' வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக கோஹ்லிக்கு பதிலாக ஹனுமன் விஹாரி இடம்பெற்றுள்ளார். இந்திய அணிக்கு ராகுல், மயங்க் அகர்வால் துவக்கம் தந்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக (50)அரைசதம் அடித்தார். அஷ்வின் 46 ரன்கள் எடுத்தார்.ஜேன்சன் 4, ஆலிவர் , ரபடா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை அடுத்து தென்ஆப்ரிக்கா அணி பேட்டிங் செய்துவருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE