வெளிப்படை தன்மையுடனே டாஸ்மாக் பார் டெண்டர்; அமைச்சர் விளக்கம்

Updated : ஜன 03, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை: டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படைத் தன்மையுடன் நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து பார் உரிமையாளர்கள், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி
Senthil Balaji, Tasmac, Bar Tender,

சென்னை: டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படைத் தன்மையுடன் நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து பார் உரிமையாளர்கள், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:
டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளன; எந்த ஒளிவுமறைவும் இல்லை. போராட்டம் நடத்திய டாஸ்மாக் பார் ஊழியர்கள், விதிமீறல் தொடர்பாக எந்த மனுவும் என்னிடம் கொடுக்கவில்லை.


latest tamil newsடெண்டரில் பங்கேற்றவர்களுக்கு சந்தேகம் இருந்தால், எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளேன். எல்லா விண்ணப்ப படிவங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆன்லைன் மூலம் பார் டெண்டர் படிவம் யார் வேண்டுமானாலும் பெறமுடியும்; நேரிலும் விண்ணப்பங்கள் பெறலாம். 2019ல் 5,387 பார்களுக்கு 6,482 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 11,715 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
03-ஜன-202222:37:50 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman டாஸ்மாக் இழுத்து மூடுவது நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே நடக்கும். அ.தி.மு.க இதற்கு லாயக்கு இல்லை இன்று சொல்லி ஆட்சிக்கு வந்தது மக்கள் மறந்து விட்டாரகள் என்று நினைப்போ? டெண்டர் விடறாங்களாமே டெண்டர்.
Rate this:
Cancel
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜன-202222:09:23 IST Report Abuse
Sathya Senthil Balaji and Sekhar Babu are in DMK only for making money for the party. They will not care for anything in life other than falling at the feet of Vidayal Head.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜன-202219:35:34 IST Report Abuse
Bhaskaran Appadiththaan niraya selavu panni jeyichuruku athai eppadi sambaathipathu .aatchiku vanthaaaraam maatham Mylapore urupinar anjukodiyil aalvaarpettayil veeduvaangiyirukaaraam .manthiriyaaga illatha avar anjukodinnaa naan oru paththukodiyileyaavathu veedu katta vendaamaa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X