பா.ஜ.,வில் சேர்ந்த ஆறே நாளில் மீண்டும் காங்., பக்கம் வந்த எம்.எல்.ஏ| Dinamalar

பா.ஜ.,வில் சேர்ந்த ஆறே நாளில் மீண்டும் காங்., பக்கம் வந்த எம்.எல்.ஏ

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (30) | |
சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த எம்.எல்.ஏ., ஒருவர் 6 நாட்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கான சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்கிடையே அம்மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் பதவி விலகியதுடன், தனிக்கட்சி துவக்கி, பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்வதாக அறிவித்தார். ஆளும்
MLA, Balwinder Singh, Returned, Congress, 6 Days, Joining BJP, Punjab, பஞ்சாப், பாஜக, பாஜ, 6 நாள், எம்எல்ஏ, காங்கிரஸ், பல்விந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த எம்.எல்.ஏ., ஒருவர் 6 நாட்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கான சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்கிடையே அம்மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் பதவி விலகியதுடன், தனிக்கட்சி துவக்கி, பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்வதாக அறிவித்தார். ஆளும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவிவந்த சூழலில், ஸ்ரீ ஹர்கோவிந்த்பூர் தொகுதி எம்எல்ஏ பல்விந்தர் சிங் லட்டி, குவாதியன் தொகுதி எம்எல்ஏ பதேசிங் பஜ்வா, முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா ஆகியோர் கடந்த டிசம்பர் 28ம் தேதி பா.ஜ.,வில் சேர்ந்தனர்.


latest tamil news



இவர்கள் மூவரும் மத்திய அமைச்சரும், பஞ்சாப் மாநிலத் தேர்தல் பொறுப்பாளருமான கஜேந்திர ஷெகாவத் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர். இந்நிலையில், பா.ஜ.,வில் இணைந்த பல்விந்தர் சிங், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உடன் நேற்று (ஜன.,02) இரவு ஆலோசனை நடத்தினார். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியுள்ளார். பா.ஜ.,வில் இணைந்த ஆறே நாட்களில் மீண்டும் காங்., பக்கம் எம்.எல்.ஏ., வந்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X