'தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்யவும்'

Updated : ஜன 03, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என்றும், அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்திய வழக்கு,
ChennaiHC, National Symbols, State Symbols, Suggest, File Case, சென்னை, ஐகோர்ட், உயர்நீதிமன்றம், தேசிய சின்னங்கள், மாநில சின்னங்கள், வழக்குப்பதிவு, அறிவுறுத்தல்

சென்னை: தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என்றும், அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்திய வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று (ஜன.,03) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news



அதில் 'வாகனங்களிலும், நம்பர் ப்ளேட்களிலும் தேசிய சின்னங்களை தவறாக பயன்படுத்துவது தேசிய சின்னங்கள் பாதுகாப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரியது என்பதால் உரிய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராதம், வழக்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


latest tamil news



அப்போது நீதிபதி குறுக்கிட்டு, ‛தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தபட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லையா? அதுபற்றி எதுவுமே அறிக்கையில் இல்லை. குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது. வேடிக்கை பார்க்காமல், காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அறிவுறுத்தினார். இந்த வழக்கு ஜன.,5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harsha Jack - Tamilnadu,இந்தியா
04-ஜன-202201:45:34 IST Report Abuse
Harsha Jack ? Please don't repeat the same comment
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
03-ஜன-202222:33:03 IST Report Abuse
David DS ஆர்மின்னு பைக்ல லோகோவை வச்சிக்கிட்டு இந்த எக்ஸ் சர்வீஸ்காரங்க வேற பெரிய அலப்பறை. வீட்ல ஒருத்தன் ஆர்மில இருந்த போதும் அந்த தெரு முழுக்க அவன் சொந்தக்காரங்க எல்லாரும் ஆர்மி லோகோவை பைக்ல வச்சிக்கிட்டு அலைவாங்க.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
03-ஜன-202220:25:36 IST Report Abuse
Duruvesan கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X