லக்னோ: லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவை குற்றவாளியாக சேர்த்து 5,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விவசாயிகளின் பேரணியில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் கார் புகுந்ததில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதனால் வெடித்த வன்முறையில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்கு தொடர்புடையவர்களை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு குழுவினர் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில், ஆஷிஸ் மிஸ்ரா முக்கிய முக்கிய குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இணை அமைச்சரின் உறவினராக கருதப்படும் விரேந்தர் சுக்லா என்பவரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE