60 சதவீதம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தியும் பயனில்லை; இஸ்ரேல் பிரதமர்

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (8)
Advertisement
ஜெருசலேம்: இஸ்ரேலில் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ்கள் செலுத்தியும் பயனில்லை என அந்நாட்டு பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதையொட்டி சில நாடுகள் பாதுகாப்பு கருதி இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அடுத்ததாக பூஸ்டர் டோஸ்களை செலுத்தி வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் இதுவரை 42 லட்சம்
Israel PM, Naftali Bennett, Booster Shot, இஸ்ரேல் பிரதமர், பூஸ்டர் டோஸ், பயனில்லை

ஜெருசலேம்: இஸ்ரேலில் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ்கள் செலுத்தியும் பயனில்லை என அந்நாட்டு பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதையொட்டி சில நாடுகள் பாதுகாப்பு கருதி இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அடுத்ததாக பூஸ்டர் டோஸ்களை செலுத்தி வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் இதுவரை 42 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தியும் எந்த பயனுமில்லை என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். ஜெருசலேம் நகரில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னெட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


latest tamil news


இஸ்ரேலில் மொத்தமுள்ள 93 லட்சம் மக்கள் தொகையில், 42 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அதாவது 60 சதவீத பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனாலும், கொரோனா புயல் விடுவதாக இல்லை. கடந்த இரு வாரங்களில் 700 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று (ஜன.,2) 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலவீனமானவர்களை பாதுகாத்தவாறே, நாட்டின் பொருளாதாரத்தை கூடுமான வரையில் தொடர்ந்து இயங்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
03-ஜன-202221:17:32 IST Report Abuse
Tamilan முன்னேறிய நாடுகள் கூறுவதைத்தான் கேட்கவேண்டும் . பூஸ்டர் போடுவதால் இறப்பு குறைவு என்று ஆரூடம் கூறுகிறார்கள். எந்த தடுப்பூசியும் போடாமலே பலர் குணமாகியுள்ளனர். மூன்று தடுப்பூசி போட்டும் இறந்துள்ளனர். இது அதனால்தான், அது இதனால்தான் என்பதெல்லாம் வெறும் கதைகள்தான். கட்டுக் கதைகளாக இருக்குபட்சத்தில் விஞ்சானிகல் அனைவரையும் தண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel
RK -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜன-202221:09:42 IST Report Abuse
RK கொரோன எங்கிருந்து எப்படி வந்தது என்று கண்டுபிடித்து அந்த நாட்டிற்கு தண்டனை கொடுத்தால் , (பொருளாதார தடை , ) கொரோன ஒழியும். இல்லையென்றால் எல்லா நாடுகளும் துன்பப்பட வேண்டி வரும். சைனாவை ஒழித்தால் கொரோன ஒழியும்.
Rate this:
Cancel
Nallappan - Singapore,சிங்கப்பூர்
03-ஜன-202219:30:57 IST Report Abuse
Nallappan இது உண்மை எனில் அப்புறம் எதுக்கு எப்ப பார்த்தாலும் PCR TEST 3வது ஊசி, 4வது ஊசி மண்ணாங்கட்டி எல்லாம். ஒவ்வொரு நாட்டுக்கு ஒரு rules. எந்த அறிவியலை வைச்சும் எங்கே உன்டானது கன்டு பிடிக்க முடியலை கையாலாகத பயளுகள்
Rate this:
Anil - BENGALURU,இந்தியா
03-ஜன-202220:19:12 IST Report Abuse
Anilco...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X