தமிழகத்தில் 3.32 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (3)
Advertisement
பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், 33.46 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில், 25 லட்சம் பேர் பள்ளிகளில் படிக்கின்றனர். அதனால், பள்ளிகளில் முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல் நாளான இன்று,(ஜன.03) மூன்று லட்சத்து 32 ஆயிரத்து 493 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை தவிர, 18
Tamilnadu, Covid Vaccine, Child, தமிழகம், தமிழ்நாடு, சிறார்கள், தடுப்பூசி

பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், 33.46 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில், 25 லட்சம் பேர் பள்ளிகளில் படிக்கின்றனர். அதனால், பள்ளிகளில் முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல் நாளான இன்று,(ஜன.03) மூன்று லட்சத்து 32 ஆயிரத்து 493 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil newsஇதை தவிர, 18 வயதுக்கு மேற்பட்ட, ஒரு லட்சத்து 232 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று (ஜன.03) மட்டும் மட்டும் மொத்தமாக, நான்கு லட்சத்து 32 ஆயிரத்து 725 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
சிறார்களுக்கு தனிவரிசை அமைத்து தடுப்பூசி போடப்படும். எனவே, பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்கு தவறாமல், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
03-ஜன-202219:06:28 IST Report Abuse
மலரின் மகள் மகிழ்ச்சி. கடந்தமுறை ஆசிரியர்களே கூட, எங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் கூட, தடுப்பூசிக்கு எதிராகவே வாட்ஸாப்ப் செய்தார்கள் நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள். தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மிகப்பெரிய தயக்கம் காட்டினார்கள். அப்போது அவர்களிடம் கூறினேன், அரசு கொஞ்ச காலம் முடிந்த பிறகு ஒருவிதத்தில் கட்டாயம் என்பது போன்ற ஒருநிலையை உருவாக்கினால் அப்போது நிச்சயம் முதல் ஆளாக சென்று போட்டுக்கொள்வீர்கள் என்று. அதுபோலவே தான் பள்ளி திறப்பதற்கு முன்பு அரசு ஊழியர்கள் கூட தடுப்பூசியை போட்டுகொண்டாள். எதிர்ப்போ பழைய அச்சமோ அவர்கள் இப்போது காட்டவில்லை. யாரோ பின்னணியில் இருந்துகொண்டுகூட தூண்டிவிட்டிருக்கக்கூடும் தடுப்பூசிக்கு எதிராக என்று கூட சொல்லப்பட்டது. இப்போது பாருங்கள் பள்ளி சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடும் நிலை. மகிழ்ச்சியாக விரும்பி போட்டுக்கொள்கிறார்கள். மாணவிகளிடம் ஆசிரியர்கள் ஊழியர்கள் பெரியவர்கள் படிக்கவேண்டிய பாடமிது. மதுரையில் ஒரு பெண் மருத்துவர், சென்னையில் ஒரு நகைச்சுவை நடிகரின் பரிபூரண நிலை அடைந்ததை இவர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு எதிராக பிரசாரம் செய்தார்கள். வெளிநாடுகளில் பள்ளி சிறார்களுக்கு இப்போது இரண்டாவது தடுப்பூசியையும் செலுத்திவிட்டு பூஸ்டர் டோஸ் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். உலக மருந்து, தடுப்பூசி உற்பத்தி மையமான இந்தியாவில் நாம் பின்தங்கி இருக்கிறோம். நடுவணரசு பல்வேறு முயற்சிகளை செய்துதான் தடுப்பூசியை பெரியளவில் வழங்குகிறது. நடுவணரசு மிக திண்ணியமாக செயலாற்றவில்லை என்றால், எதிர்க்கும் கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக வேறுவிதமாகவே இருந்துகொண்டிருக்கும். மத்திய அரசிற்கு நன்றி பாராட்டுவோம்.
Rate this:
Cancel
Ram -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜன-202218:44:50 IST Report Abuse
Ram Credit goes to Modi Government. They have released so much of vaccinations to Tamil Nadu else, how can TN vaccinate this many children?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X