தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,728 ஆக அதிகரித்துள்ளது : 662 பேர் நலம்

Updated : ஜன 03, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்1,728 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். 662பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 1,594 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 1,728 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,03,119 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்1,728 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். 662பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 1,594 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 1,728 ஆக அதிகரித்துள்ளது.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,03,119 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 1,727 பேர், ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து வந்த ஒருவரையும் சேர்த்து மொத்தம் 1,728 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,52,856 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,77,53,206 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1012 பேர் ஆண்கள், 716 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 16,06,848 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,45,970 ஆகவும் அதிகரித்து உள்ளது. 662 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,05,696 ஆக உயர்ந்துள்ளது.
6 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் ஒருவரும் , அரசு மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,796 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை


சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 776 ஆக இருந்த நிலையில் இன்று (ஜன.3 ம் தேதி) 876 ஆக அதிகரித்துள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news






மாவட்ட வாரியாக ஒமைக்ரான் விபரம்


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-202206:02:21 IST Report Abuse
Mani . V இருங்கப்பு. இரண்டு நாள் முன்பு தானே கோவையில் பல லட்சம் பேரை ஒன்று கூடச் செய்தோம். இன்னும் சில நாளில் தெரியும், கோவிட் பாதிப்பை நாங்கள் எப்படி, எவ்வளவு உயர்த்துகிறோம்? என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X