சித்துவால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் காங்., முக்கியஸ்தர்கள் குமுறல்..!

Updated : ஜன 03, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (9)
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் காங்., தலைவர் நவோஜித் சிங் சித்துவால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் காங்., முக்கியஸ்தர்கள் வரவுள்ள சட்டமன்ற தேர்தலை அடுத்து குமுறி வருகின்றனர்.வரும் மார்ச் மாதம் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், டில்லி, கோவா, உ.பி., மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பாஜ., ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மும்முனை போட்டி

சண்டிகர்: பஞ்சாப் காங்., தலைவர் நவோஜித் சிங் சித்துவால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் காங்., முக்கியஸ்தர்கள் வரவுள்ள சட்டமன்ற தேர்தலை அடுத்து குமுறி வருகின்றனர்.



latest tamil news



வரும் மார்ச் மாதம் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், டில்லி, கோவா, உ.பி., மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பாஜ., ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மும்முனை போட்டி துவங்கியுள்ளது.
தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் பஞ்சாப் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து உட்கட்சி பூசல் நீடித்த வண்ணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்பவர் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து.
முன்னதாக இவர் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் உடன் கருத்து மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது பஞ்சாப் துணை முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் சுக்விந்தர் சிங் உடன் இவர் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார்.


latest tamil news



இதுகுறித்து கூறிய சுக்விந்தர் சிங் தான் பஞ்சாப் சட்டமன்றத்தில் உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டது சித்துவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தான் தற்போது கூட தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் வருத்தத்துடன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.முன்னாள் பஞ்சாப் உள்துறை அமைச்சர் ராண்டவா உடனும் சித்து தொடர் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தார். அமரிந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ராண்டவாவை அடுத்த முதல்வராக தேர்வு செய்ய சித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை அடுத்து மாநிலத்தின் முதல் தலித் தலைவரான சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை முன்னரே அறிவிக்கப் போவதில்லை என்று கட்சி வட்டாரம் கூறுகிறது.
தேர்தலில் வெற்றி அடைந்த பின்னர் யார் முதல்வர் என்று பஞ்சாப் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தேர்வு நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. சித்து தொடர்ந்து இதேபோல பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நவ்ஜித் சிங் சீமா உடனும் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தார். இதனை முதல்வர் சரண்ஜித் தீர்த்து வைத்தார். இதனை அடுத்து சித்துவால் பாதிக்கப்பட்ட பலர் தற்போது கட்சிக்குள் கடும் அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
04-ஜன-202208:04:56 IST Report Abuse
Rpalnivelu சித்து ஒரு வெத்து என்பதை பஞ்சாப் மக்கள் விரைவிலேயே புரிந்து கொள்வார்கள் இவனை முதல்வராகினால் பஞ்சாபை மற்றொரு பாகிஸ்தானாகிடுவான் இந்த பரதேசியை முளையிலே கிள்ளி எறிவது நாட்டுக்கு நல்லது
Rate this:
Cancel
04-ஜன-202207:02:54 IST Report Abuse
அப்புசாமி சித்துவை நீக்கினால்தான், பஞ்சாப் காங்கிரஸ் உருப்படும்னு தோணுது.
Rate this:
04-ஜன-202211:35:17 IST Report Abuse
SUBBU, MADURAI 100 உண்மையான கருத்து....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-202204:42:26 IST Report Abuse
J.V. Iyer பஞ்சாபிலும் காங்கிரஸ் காணாமல் போவதற்கு ராகுலுக்கு சித்து உதவி செய்கிறார். வாழ்க. ஆனால் தேசத்திற்கு ஆபத்தான ஆம் ஆத்மீ வந்து தொலையுமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X