சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

சொன்னதை செய்யும் தி.மு.க.,வினர்!

Added : ஜன 03, 2022 | கருத்துகள் (2)
Advertisement
சொன்னதை செய்யும் தி.மு.க.,வினர்!நாயர் கொடுத்த இஞ்சி டீ, நண்பர்களுக்கு இதமாக இருந்தது.''கோவை, 'ஆவின்' நிறுவனத்துல உற்பத்தி நிலைய பணியை கண்காணிக்கிறதுக்கு, தற்காலிக அடிப்படையில துணை மேலாளர் பதவிக்கு ஒருவரை நியமிக்கிறது வழக்கமுங்க...'' என்றபடியே முதல் தகவலை சொல்ல ஆரம்பித்தார், அந்தோணிசாமி...''கடந்த அ.தி.மு.க., ஆட்சியில, 'மாஜி' அமைச்சரான, 'வேலும் மணியும்'

 டீ கடை பெஞ்ச்


சொன்னதை செய்யும் தி.மு.க.,வினர்!


நாயர் கொடுத்த இஞ்சி டீ, நண்பர்களுக்கு இதமாக இருந்தது.

''கோவை, 'ஆவின்' நிறுவனத்துல உற்பத்தி நிலைய பணியை கண்காணிக்கிறதுக்கு, தற்காலிக அடிப்படையில துணை மேலாளர் பதவிக்கு ஒருவரை நியமிக்கிறது வழக்கமுங்க...'' என்றபடியே முதல் தகவலை சொல்ல
ஆரம்பித்தார், அந்தோணிசாமி...

''கடந்த அ.தி.மு.க., ஆட்சியில, 'மாஜி' அமைச்சரான, 'வேலும் மணியும்' செல்வாக்கால, 'கார்த்திகை'யான பெண் ஒருவருக்கு அப்பதவி கிடைச்சதுங்க...

''அவரை அழைச்சுட்டு வர, வீட்டுக்கே ஜீப் போகுமுங்க... ஆனா, ஆட்சி மாறினதும், பணி நீட்டிப்பு வழங்காம, அவரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க...

''என்ன மாயமோ தெரியலை... ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகி, மீண்டும் அந்த பெண்ணுக்கே பதவியை கொடுக்க சொல்லிட்டாராமுங்க...

''ஆட்சி மாறினாலும் அசைக்க முடியாத அளவுக்கு, 'பவர்புல்'லா இருக்காங்களே அந்த அம்மான்னு, ஆவின் ஊழியர்கள் பேசிக்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''ஆட்சி மாறினா, சில விஷயங்கள் மட்டும் தான் மாறாது ஓய்...'' என அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.

'நீங்க எதை சொல்லுறீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ஆளுங்கட்சியினருக்கு, 'டாஸ்மாக் பார்' வருமானம் தான் அதிகளவுல கொட்டும்... அதனால கடந்த ஆட்சியில, அ.தி.மு.க., நிர்வாகிகள், 10 வருஷமாக பார் நடத்தி செழிப்பா இருந்தா ஓய்...

''கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகா பகுதியில, 'பார்' நொறுக்கு தீனி, 'சில்லிங்'ன்னு பல வகையில, 'கல்லா' கட்டிண்டு வந்தா ஓய்...

''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அனைத்து பார்களும், ஆளுங்கட்சிக்காரா கைக்கு மாறிண்டு வர்றது ஓய்...

''இதுவரை கல்லா கட்டிண்டு இருந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், 'இப்பவும் எங்களுக்கு கமிஷன் தரணுமு'ன்னு, 'பார்' எடுத்து நடத்துவோரை மிரட்டிண்டு இருக்காளாம் ஓய்.. ''சிலர், 'பார்' வருமானத்துக்காக, அ.தி.மு.க.,வுல இருந்து, தி.மு.க.,வுக்கு தாவிண்டும் இருக்காளாம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''இந்த விஷயத்துல தான், தி.மு.க.,வினர் சொன்னதை செய்யுறாங்க பா...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''அப்படியா... அது என்ன விஷயம் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே, 'மணல் கடத்த அனுமதிப்போமுன்'னு சொன்னாங்க... இப்போ அதை செய்யுறாங்க பா...

''கோவை மாவட்டம் சிறுமுகையில இருந்து அன்னுார் போற சாலையில, ஆணைப்பள்ளிபுதுாருல தனியார் இடத்துல இருந்து மண் எடுத்து லாரிகள்ல கடத்திகிட்டு இருக்காங்க பா...

''தி.மு.க., நிர்வாகி தலைமையில, வேறு இடத்துல வாங்குன, 'பர்மிட்டை' வைச்சு, இங்கே மண்கடத்துறாங்க பா...

''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, மேட்டுப்பாளையம் வருவாய் துறையினர், மண் கடத்தின லாரிகளை மடக்கினாங்க பா...

''உடனே, தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் பலரும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு போன் செஞ்சு, மண் கடத்துன லாரிகளை எல்லாம் விட்டுருங்கன்னு மிரட்டியிருக்காங்க பா...

''ஆனால் அதிகாரிகள், அந்த லாரிகளை சிறுமுகை போலீசில் ஒப்படைச்சுருக்காங்க... இதனால தி.மு.க., நிர்வாகிகள், 'நாங்க யாருன்னு காட்டுறோமுன்'னு கோபமா சொல்லியிருக்காங்களாம் பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.
நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal - Chennai,இந்தியா
04-ஜன-202211:39:49 IST Report Abuse
Gopal மணல் கொள்ளையன் சேகர் ரெட்டி வீட்டில் ரைடு நடத்திதானுங்களே அது என்னாச்சு. அதுவும் வடக்கத்திய கும்பல் நடத்திய ரைடுகள் எதுவுமே வெளியில் வரவில்லையே....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
04-ஜன-202203:51:11 IST Report Abuse
Bhaskaran உடன் பிறப்புகள் அப்படிதான் செய்வார்கள் ..சென்னை இலவசகாழிப்பறைகளில் காசுபிடுங்கிறவங்க அவிங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X