சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சைவ உணவில் புரதத்திற்கு நிறைய வாய்ப்பு!

Added : ஜன 03, 2022 | கருத்துகள் (8)
Advertisement
புரதம் மனிதர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த, 'டயட்டீஷியன்' ஷைனி சுரேந்திரன்: மனிதர்களின் ஆரோக்கியத்தில் புரதச்சத்துக்கு முக்கியமான பங்குண்டு. நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் புரதம் முக்கிய பங்காற்றுகிறது. அதனால் தான் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற, புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள
சொல்கிறார்கள்

புரதம் மனிதர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த, 'டயட்டீஷியன்' ஷைனி சுரேந்திரன்: மனிதர்களின் ஆரோக்கியத்தில் புரதச்சத்துக்கு முக்கியமான பங்குண்டு. நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் புரதம் முக்கிய பங்காற்றுகிறது. அதனால் தான் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற, புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.தசைகளின் வளர்ச்சிக்கும், 'ஆன்டிபாடி, ஹார்மோன்'கள் மற்றும் 'என்சைம்' சுரப்புக்கும் புரதச்சத்து மிக அவசியம். பழைய செல்களை பழுது பார்த்து, புதிய செல்களை உருவாக்கவும் இது தேவை. சருமத்தை தொய்வின்றி வைத்திருக்க உதவும், 'கொலாஜனை' சப்போர்ட் செய்து, இளமைத் தோற்றத்துக்கு உதவுவதிலும் இதன் பங்கு தேவைப்படுகிறது.இவ்வளவு ஏன்... சருமம், நகங்கள் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் மிக மிக அவசியம். எடை குறைப்பு முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு, சரியான எடையைத் தக்கவைத்து, தசைகளின் வளர்ச்சிக்கு உதவி செய்து, கொழுப்பைக் கரைப்பதில் உடலுக்கு உதவுவதும் புரதம் தான்.சைவ உணவுக்காரர்கள் பருப்பில் மட்டும் தான் புரதம் இருக்கிறது என நினைத்துக்கொள்ள வேண்டாம். பனீர், தயிர், சோயா, டோபு என்ற சோயா பனீர், சோயா சங்க்ஸ், உலர்ந்த சோயா பீன்ஸ் பருப்பு, நட்ஸ், நட்சிலிருந்து பெறப்படும் வெண்ணெய், தயிர், பால், விதைகள், பச்சைப் பட்டாணி, காளான்... இப்படி இன்னும் பல உணவுகளில் இதன் சத்து கிடைக்கும்.பால் உணவுகள் கூட எடுத்துக்கொள்ளாத, 'வீகன்' உணவுக்காரர்களுக்கும் பிரவுன் ரைஸ், பட்டாணி போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் புரோட்டீன் சப்ளிமென்டுகள் கிடைக்கின்றன.பருப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளும்போது, வாயு தொந்தரவு வருவதாக பலரும் சொல்கின்றனர். சமைப்பதற்கு முன், பருப்பை ஊறவைப்பது, முளைகட்டுவது, புளிக்க வைப்பது, ஆவியில் வேக வைப்பது போன்றவற்றின் மூலம் வாயு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கலாம்.ஒருவேளை இப்படியெல்லாம் செய்தும் வாயு தொந்தரவு நீடித்தால், குறிப்பிட்ட அந்தப் பருப்பைத் தவிர்த்து விடுங்கள்.தினசரி உங்களுக்குத் தேவைப்படும் புரதத்தை மூன்று வேளை உணவுகளிலும் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இரவு உணவுடன் எடுப்பதற்கு பதில், ஒரு வேளை புரதத்தை மட்டும் மாலையில் எடுத்துக்கொள்ளுங்கள்.காய்கறிகளின் அளவை அதிகரிக்கையில், கூடவே புரதமும் சரியான அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உடலின் ஒவ்வொரு கிலோ எடைக்கும், 1 கிராம் அளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண் டும். 50 கிலோ எடை மனிதர் தினமும், 50 கிராம் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும்!

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
04-ஜன-202214:11:05 IST Report Abuse
தமிழன் பயனுள்ள கட்டுரை. பருப்பு செய்முறையும், புரத அளவும் மிகவும் பயனுள்ள செய்தியாகும். ஷைனி சுரேந்திரன் அவர்களுக்கு நன்றி.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
04-ஜன-202210:25:06 IST Report Abuse
Sampath Kumar ஆர்யா கண்டு பிடிப்பு நமது முனோர்கள் சொல்லாததிய இவரு சொல்லறாரு முனோர்கள் எல்லாம் மூடர்கள் என்பது இவர்களின் நினைப்பு போல அத காலத்தில் எத்தகைய ஒன்னாவு உண்டார்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தார்கள் நோயற்ற வாழவே குறைவற்ற செல்வம் என்று ஏன் சொன்னார்கள் ஏதன் புரிதலை உணரவேண்டும் என்றால் நமுத்து பாரம்பரியத்தை போற்றி பாதுகாத்துவரும் நபர்களிடம் பேட்டி கண்டு போடவேணும் செய்வார்களா ?
Rate this:
Cancel
04-ஜன-202210:20:10 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் தேவைக்கு அதிகமான புரோட்டீன் எடுத்துக்கொள்ளக் கூடாது சிறுநீரக கற்கள், சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்
Rate this:
தமிழன் - madurai,இந்தியா
04-ஜன-202217:37:22 IST Report Abuse
தமிழன்அதுக்குதான் எவ்வளவு தேவைன்னும் மேலே சொலிருக்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X