2022ல் கொரோனாவுக்கு முடிவு உலக சுகாதார அமைப்பு உறுதி

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 03, 2022 | கருத்துகள் (4)
Advertisement
நியூயார்க் :''தடுப்பூசியில் சமத்துவம் இல்லாத நிலையை போக்கினால் கொரோனா பரவலை 2022ல் முடிவுக்கு கொண்டு வரமுடியும்,'' என, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியேசஸ் தெரிவித்தார்.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியேசஸ் கூறியதாவது:பெருந்தொற்று பரவலின் மூன்றாம் ஆண்டில் நாம் அடியெடுத்து
 2022, கொரோனா,முடிவு ,  உலக சுகாதார அமைப்பு தி

நியூயார்க் :''தடுப்பூசியில் சமத்துவம் இல்லாத நிலையை போக்கினால் கொரோனா பரவலை 2022ல் முடிவுக்கு கொண்டு வரமுடியும்,'' என, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியேசஸ் தெரிவித்தார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியேசஸ் கூறியதாவது:பெருந்தொற்று பரவலின் மூன்றாம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். சுகாதாரத் துறையில் பல ஆண்டுளாக முயன்று நாம் அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு இந்த தொற்று பெரும் சவாலை விடுத்துள்ளது.


latest tamil news



வழக்கமான தடுப்பூசி பணிகள் பாதிக்கப்பட்டது மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கான தொடர் சிகிச்சைகளை எடுக்க முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில் 'டெல்டா' மற்றும் 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்றுகள் சுனாமியை போல பரவி வருகின்றன. இது மருத்துவத்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணிச்சுமையை மேலும் அதிகரித்துஉள்ளன.கொரோனா தொற்று பரவலை முற்றிலுமாக ஒழிக்க இந்த புத்தாண்டில் நம் சபதம் ஏற்க வேண்டும்.நடப்பாண்டு 2022ல் உலகின் அனைத்து நாடுகளிலும் 70 சதவீத மக்களை தடுப்பூசி சென்றடைய வேண்டும். அப்போது தான் தொற்று பரவலை ஒழிக்க முடியும்.தடுப்பூசியில் சமத்துவம் வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வழி செய்யாமல் அதை தங்கள் வசமே சில நாடுகள் வைத்திருந்தால் தொற்று பரவலை ஒழிக்க முடியாது.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எல்லாருக்கும் தடுப்பூசி கிடைக்க வழி செய்தால் 2022ல் கொரோனாவை ஒழித்துவிட முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-202206:45:10 IST Report Abuse
Kasimani Baskaran வாவ்... முடிவே செய்துவிட்டார்களா? ஆனால் வைரஸ் அந்த முடிவுக்கு கட்டுப்பட வேண்டுமே...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-202206:12:58 IST Report Abuse
Mani . V அப்பு அவசரப்பட்டு அப்படி சொல்லாதீக. இப்பத்தான் நாங்க கோவையில் பல லட்சம் பேரை குழுமச் செய்தோம். இன்னும் பலப், பல கூட்டங்களை நடத்தி கொரோனா, ஒமைக்ரான் பரவலை துரிதப்படுத்துவோம். அதுனால நாங்க இப்ப முடிய விட மாட்டோம்.
Rate this:
Cancel
04-ஜன-202203:41:40 IST Report Abuse
Ramesh Sargam 0 …
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X