ஹிந்து பண்டிகைகள் புறக்கணிப்பு; தி.மு.க., காலண்டரில் விஷமம்

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (60)
Advertisement
திருப்பூர் : ஹிந்து மத பண்டிகை நாட்களை, அரசு விடுமுறை நாள் என குறிப்பிட்டு, தி.மு.க.,வினர் வெளியிட்ட காலண்டருக்கு எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலர் மற்றும் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சந்திரசேகரன். இவர் 2022ம் ஆண்டுக்கான தினசரி காலண்டரை வினியோகித்துள்ளார். அதில் தலைவர்கள் பிறந்த நாள், மறைந்த நிர்வாகிகளின் நினைவு நாட்கள்
DMK, Hindu Festivals, Daily Calendar, ஹிந்து பண்டிகைகள் ,புறக்கணிப்பு தி.மு.க.,  விஷமம்

திருப்பூர் : ஹிந்து மத பண்டிகை நாட்களை, அரசு விடுமுறை நாள் என குறிப்பிட்டு, தி.மு.க.,வினர் வெளியிட்ட காலண்டருக்கு எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.

தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலர் மற்றும் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சந்திரசேகரன். இவர் 2022ம் ஆண்டுக்கான தினசரி காலண்டரை வினியோகித்துள்ளார். அதில் தலைவர்கள் பிறந்த நாள், மறைந்த நிர்வாகிகளின் நினைவு நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.ஆனால், ஹிந்து பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாள் என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே நேரம், பிற மத பண்டிகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


latest tamil news


திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்வேல் கூறியதாவது: ஹிந்துக்கள் பண்டிகையை அரசு விடுமுறை நாள் என குறிப்பிடும் இந்த பகுத்தறிவாதிகள், அதே காலண்டரில் மனையடி சாஸ்திரம், வாஸ்து நாள், சுபமுகூர்த்த நாள், ஓரைகள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளனர்.

தி.மு.க.,வினர், தங்கள் ஒவ்வொரு செயலிலும், ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று வெளிக்காட்டி வருகின்றனர். ஹிந்துக்களின் ஓட்டுகளை வாங்காமல் எவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும். உடனடியாக காலண்டரில் திருத்தம் செய்து வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
08-ஜன-202206:09:00 IST Report Abuse
Indhuindian எவ்வளோ அடிச்சாலும் தாங்கரான்யா இவன் ரொம்ப நல்லவன்டா -இது தான் தி மு க வின் இந்துக்கள்
Rate this:
Cancel
Venramani Iyer - chennai,இந்தியா
05-ஜன-202213:22:23 IST Report Abuse
Venramani Iyer திமுகவில் இருக்கும் ஹிந்துக்களுக்கு சொரணை இருக்கா?
Rate this:
Cancel
Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
04-ஜன-202218:51:15 IST Report Abuse
Venkatasubramanian krishnamurthy இத்தனைக்கும் துரை.சந்திரசேகரன் என்ற அவர் திருவையாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினர். தொடர்ந்து அங்கு வென்று வருபவர். அப்பருக்கு கைலாய தரிசனம் தந்த ஊரிலிருந்து இப்படி ஒரு கோரிக்கை காம்பு. அடுத்தமுறை இந்து வாக்குகள் வேண்டாமென பகிரங்கமாக அறிவித்துவிட்டு களமிறங்குவது நல்லது.
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
04-ஜன-202220:37:07 IST Report Abuse
Saiஇந்து விரத நாட்கள்னு ஒரு முழ நீளம் லிஸ்ட் போட்டிருக்கே அது எவன் கண்ணிலும் படவில்லையா? கிறிஸ்துவ முஸ்லீம் பண்டிகை நாட்களையும் போட்டிருக்கிறது அரசு விடுமுறை நாட்கள் என்கிற லிஸ்ட்டில் எல்லா மத பண்டிகைகளும் உள்ளன இதுதான் ஒவ்வொரு ஆண்டு காலண்டரில் ஒரே ஸ்டாண்ர்டாக சிவகாசிக்காரர்கள் போட்டு வருகிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X