பெண் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வலுக்கும் கோரிக்கை

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
மும்பை : பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் மசோதாவை ஆய்வு செய்ய இருக்கும் பார்லிமென்ட் நிலைக்குழுவில், பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த, சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி கோரிக்கை வைத்துள்ளார்.பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா, கல்வி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட துறைகளுக்கான பார்லி., நிலைக்குழுவின் ஆய்வுக்கு


மும்பை : பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் மசோதாவை ஆய்வு செய்ய இருக்கும் பார்லிமென்ட் நிலைக்குழுவில், பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த, சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி கோரிக்கை வைத்துள்ளார்.



latest tamil news




பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா, கல்வி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட துறைகளுக்கான பார்லி., நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த குழுவில் 31 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில், திரிணமுல் காங்., கட்சியின் சுஷ்மிதா தேவ் மட்டுமே ஒரே பெண் உறுப்பினராக இருந்து வருகிறார். அந்த நிலைக்குழுவில் உள்ள உறுப்பினர்களில், பெண்களின் எண்ணிக்கையை உயர்த்தக் கோரி, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி கடிதம் எழுதி உள்ளார்.


latest tamil news




அதில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் மசோதா, ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இருக்கும் பார்லி., நிலைக்குழுவால் ஆய்வு செய்யப்பட உள்ளது; இது வருத்தம் அளிக்கிறது. இதை ஆய்வு செய்வதற்கு முன், பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கருத்துகள் பெறப்பட வேண்டும். இந்த நிலைக்குழுவில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
04-ஜன-202210:09:26 IST Report Abuse
pattikkaattaan நியாயமான கோரிக்கை ... பரிசீலிக்க வேண்டும்
Rate this:
Cancel
04-ஜன-202209:34:14 IST Report Abuse
SUBBU, MADURAI இந்த குழுவில் உள்ள மொத்த 31 உறுப்பினர்களில் ஒரு 15 பேராவது பெண் உறுப்பினர்களாக இருப்பதுதான் நியாயமாக படுகிறது.அதுதான் முறையான செயல்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
04-ஜன-202208:06:21 IST Report Abuse
duruvasar சொல்லாத 15 லட்சம் வேண்டுமென தினம் அடம்பிடிப்பது யாரெல்லாம் எடுத்த முடிவு அப்பு. ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X