பெண் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வலுக்கும் கோரிக்கை| Dinamalar

பெண் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வலுக்கும் கோரிக்கை

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (9) | |
மும்பை : பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் மசோதாவை ஆய்வு செய்ய இருக்கும் பார்லிமென்ட் நிலைக்குழுவில், பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த, சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி கோரிக்கை வைத்துள்ளார்.பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா, கல்வி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட துறைகளுக்கான பார்லி., நிலைக்குழுவின் ஆய்வுக்கு


மும்பை : பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் மசோதாவை ஆய்வு செய்ய இருக்கும் பார்லிமென்ட் நிலைக்குழுவில், பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த, சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி கோரிக்கை வைத்துள்ளார்.



latest tamil news




பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா, கல்வி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட துறைகளுக்கான பார்லி., நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த குழுவில் 31 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில், திரிணமுல் காங்., கட்சியின் சுஷ்மிதா தேவ் மட்டுமே ஒரே பெண் உறுப்பினராக இருந்து வருகிறார். அந்த நிலைக்குழுவில் உள்ள உறுப்பினர்களில், பெண்களின் எண்ணிக்கையை உயர்த்தக் கோரி, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி கடிதம் எழுதி உள்ளார்.


latest tamil news




அதில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் மசோதா, ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இருக்கும் பார்லி., நிலைக்குழுவால் ஆய்வு செய்யப்பட உள்ளது; இது வருத்தம் அளிக்கிறது. இதை ஆய்வு செய்வதற்கு முன், பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கருத்துகள் பெறப்பட வேண்டும். இந்த நிலைக்குழுவில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X