நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 'வீடியோ' பதிவுக்கு உத்தரவு

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (6)
Advertisement
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வேட்புமனு தாக்கல், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கையை 'வீடியோ' பதிவு செய்ய, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி, அ.தி.மு.க., அமைப்பு செயலர்



சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வேட்புமனு தாக்கல், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கையை 'வீடியோ' பதிவு செய்ய, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி, அ.தி.மு.க., அமைப்பு செயலர் ஜெயகுமார், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''அக்டோபரில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது, விதிமீறல்கள் நடந்தன; அ.தி.மு.க., வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.


latest tamil news



வேட்புமனுவில் உள்ள பக்கங்களை கணக்கிட்டு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும்,'' என்றார்.மாநில தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்புகை சீட்டு வழங்க விதிகள் இல்லை என்று தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் முதல், ஓட்டு எண்ணிக்கை வரை, வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து, வேட்புமனு தாக்கல், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை வரையிலான தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவும், விதிகளை கண்டிப்புடன் பின்பற்றவும், மாநில தேர்தல் ஆணையத்திற்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்து வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
04-ஜன-202212:36:37 IST Report Abuse
Subramaniyam Veeranathan அப்படியே நீதிமன்றங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளையும் மக்கள் பார்வைக்கு ஆன்லைன் பதிவு செய்து மக்களின் பார்வைக்கு வழி செய்தல் உண்மையான நீதி கிடைக்க வழிவகுக்கும்.
Rate this:
Cancel
04-ஜன-202212:15:27 IST Report Abuse
ஆரூர் ரங் சேர்மன தேர்தலுக்கு கவுன்சிலர்களை😛 விலை பேசுவதை எந்த CC கேமிராவில் கண்டுபிடிப்பார்கள்?
Rate this:
Cancel
C G MAGESH - CHENNAI,இந்தியா
04-ஜன-202210:27:27 IST Report Abuse
C G MAGESH அரசு ஊழியர்கள் அறிவாலய ஊழியர்களாக இருக்கும் வரை, வாக்கு சீட்டு முறை இருக்கும் வரை, திருடர்களுக்கு கவலை இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X