'மாஜி' அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நெருங்க முடியாமல் திணறும் போலீஸ் படை

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (48)
Advertisement
சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு, ஆவின் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, 3 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார்கள் வந்தன.இது குறித்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக உள்ள
Rajenthra Bhalaji, admk

சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு, ஆவின் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, 3 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார்கள் வந்தன.

இது குறித்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய, எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளா, கர்நாடகா என, பல இடங்களில் தேடியும் ராஜேந்திர பாலாஜி சிக்கவில்லை. அவர் பதுங்கி இருக்கும் இடத்தைக்கூட நெருங்க முடியாமல் போலீஸ் படைகள் திணறி வருகின்றன.


latest tamil news



ராஜேந்திர பாலாஜி வெவ்வேறு சிம்கார்டுகள் பயன்படுத்தி, வழக்கறிஞரை தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது. போலீசார் நெருங்குவது அவருக்கு முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. இதனால், காவல் துறையில் இருந்து தகவல் கசிகிறதா என்ற சந்தேகம் உயர் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. இருப்பினும், விரைவில் சிக்குவார் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
04-ஜன-202213:54:37 IST Report Abuse
vijay பணத்தை திருப்பி கொடுத்துட்டேன்னு சொன்ன ஒரு திருட்டு நபரை அமைச்சராக்கி இருக்கிறது தீயமுக திருட்டு அரசு
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
04-ஜன-202213:51:30 IST Report Abuse
நல்லவன் ஒருவேளை இவருக்கு பரிட்சியம்மான போலீஸ் அதிகாரி வீட்டில் கூட இருக்கலாம்.. எப்படியோ முன்று கோடிக்கு மேலவே, இதுவரையிலும் இவரை தேடுவதற்காக செலவானதாக போலீஸ் கணக்கு காமிச்சாலும் ஆசிரியப்டுறத்துக்கு ஒண்ணுமில்ல. இவரை தேடும் செலவையம் இவர்தான் தரவேண்டும்ன்னு அரிக்கைவிடுங்கள் - அவரே வந்து சரண்டர் ஆயிடுவாரு..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-ஜன-202212:58:02 IST Report Abuse
sankaseshan எத்தனுக்கு எத்தன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X