கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் 'புளோரோனா'

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : உலக மக்களுக்கு சோதனை மேல் சோதனையாக 'கொரோனா' உடன் 'இன்புளுயன்சா' வைரசும் சேர்ந்து, 'புளோரோனா' என்ற புதிய வைரஸ் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், 'டெல்டா, காமா, ஒமைக்ரான்' என பல வடிவங்களில் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுடன், இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலை உண்டு பண்ணும்
florona,Flu,Coronavirus

புதுடில்லி : உலக மக்களுக்கு சோதனை மேல் சோதனையாக 'கொரோனா' உடன் 'இன்புளுயன்சா' வைரசும் சேர்ந்து, 'புளோரோனா' என்ற புதிய வைரஸ் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், 'டெல்டா, காமா, ஒமைக்ரான்' என பல வடிவங்களில் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுடன், இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலை உண்டு பண்ணும் வைரசும் இணைந்து, புளோரோனா என்ற புதிய வைரஸ் உருவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேலில் கர்ப்பிணி ஒருவருக்கு முதன் முதலாக புளோரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் இன்புளுயன்சா ஆகிய இரண்டுக்கும் இருமல், ஜலதோஷம், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வறட்சி, தலைவலி, சோர்வு போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


latest tamil news


எனினும் நோய் பாதிப்பு அறிகுறி தோன்றும் காலத்தில் வித்தியாசம் காணப்படுகிறது. உடலில் வைரஸ் நுழைந்த உடன் 3 - 4 நாட்களில் 'புளூ' பாதிப்பு அறிகுறிகள் தோன்றுகின்றன. 2 - 14 நாட்களில் கொரோனா பாதிப்பு தெரியத் துவங்குவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இரு வைரஸ்களும் காற்று வாயிலாகவே மூச்சுக் குழல், நாசி, நுரையீரல் செல்களை தாக்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும் இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன. சிலருக்கு அறிகுறியின்றி பாதிப்பு ஏற்படுகிறது. வேறு சிலருக்கு மிதமானது முதல் தீவிர பாதிப்பு உண்டாவது தெரியவந்துள்ளது. இரண்டு வைரஸ்களின் மரபணுக்களும் வெவ்வேறு என்பதால் அவற்றின் பாதிப்பை கண்டுபிடிக்க தனித் தனி சோதனை அவசியம்.

புளோரோனா பாதிப்பு தீவிரமடைந்தால் நுரையீரல் அழற்சி நோய்க்கு வித்திடும். அத்துடன், ஒரு சிலருக்கு இதய பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடும் என, விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு, நாட்டு மக்களுக்கு நான்காவது 'பூஸ்டர் டோஸ்' போடும் திட்டத்தை துவக்கிஉள்ளது. இந்தியாவில் தற்போது தான் கொரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது.

இந்நிலையில் புளோரோனா பாதிப்பை தவிர்க்க முக கவசம் அணிவது, அடிக்கடி கை, கால்களை கழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
04-ஜன-202219:53:14 IST Report Abuse
R S BALA இருமல், ஜலதோஷம், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வறட்சி, தலைவலி, சோர்வு போன்ற அறிகுறிகள் காலங்கால மாக உலகத்துல இருக்கதானய்யா செஞ்சுது.. ஆனால் இப்போதெல்லாம் இவை நமக்கு இதில் ஏதாவது ஒன்று வந்தால் கூட மரண பீதி வர்ற அளவுக்கு மனநிலை உருவாக்கி விட்டார்கள் .. இன்னும் எத்தனை காலந்தான் வாட்டுவார் இந்த உலகத்திலே..😌
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
04-ஜன-202213:49:49 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் மனிதன் தான் எனும் செருக்குடன், அகந்தையுடன், ஆணவத்துடன்.. கலியுகம் முடியும் நேரத்தில் கல்கி அவதாரமாய் தோன்றுவேன்.. அப்படீன்னு கண்ணனவன் சொன்னபடி.. கல்கியின் ரீ நேமாய் இருக்குமோ... இந்த “கொரோனா”... “புளோரோனா”? செத்தான்டா... சேகரு ... ஹா... ஹா... ஹா....
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
04-ஜன-202212:19:10 IST Report Abuse
Nellai tamilan போதும்டா சாமி இன்னும் என்னவெல்லாம் பாக்கி இருக்கு தெரியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X