அருணாச்சலில் பெயர் மாற்றம்: சீனாவின் மிரட்டல் நாடகம்

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி : 'நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளது, சீன அரசு நடத்தும் வழக்கமான மிரட்டல் நாடகம்' என, வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை உள்ளது. கிழக்கு லடாக்கின் சில பகுதிகளில் சீனப் படைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன. இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் 15 முக்கிய
India, China, LoC, Arunachal Pradesh

புதுடில்லி : 'நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளது, சீன அரசு நடத்தும் வழக்கமான மிரட்டல் நாடகம்' என, வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை உள்ளது. கிழக்கு லடாக்கின் சில பகுதிகளில் சீனப் படைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன. இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் 15 முக்கிய இடங்களுக்கு, மாண்டரின் மொழியில் புதிய பெயர்களை சீன அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது: மிக நீண்ட காலமாக சீனா கடைப்பிடிக்கும் மிரட்டல் யுக்தி இது. தான் எதிர்க்கும் நாடுகளை உணர்வுப்பூர்வமாக துாண்டிவிடுவது சீனாவின் வாடிக்கை. அதற்கு சமீபத்திய உதாரணம், தைவான். அதை தன் நாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக பல நடவடிக்கைகளை சீனா எடுத்து வருகிறது.


latest tamil news



தைவானின் வான்வெளியில் கடந்தாண்டின் பெரும்பகுதி சீன போர் விமானங்கள் சுற்றி வந்துள்ளன. கடந்த நவம்பர் 28ல் ஒரே நாளில் 27 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் சென்று வந்துள்ளன. அதுபோல இந்தியாவை மிரட்டுவதற்காக அருணாச் சல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு புதிய பெயர்களை சீனா அறிவித்துள்ளது.

எல்லை பிரச்னை குறித்து பேச்சு நடத்துவதற்கு முன்வரும்படி பிரதமர் நரேந்திர மோடி அரசை மிரட்டுவதற்காக இந்த செயலில் சீனா ஈடுபட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், சமீபத்தில் திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவைச் சந்தித்துள்ளார்; மேலும் திபெத்திய அதிகாரி களுடன் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சீனா, அருணாச்சல பிரதேசத்தில் பெயர்களை மாற்றி மிரட்டல் விடுத்துள்ளது.

கடந்தாண்டு இறுதியில் நம் எம்.பி.,க்கள் சிலர் திபெத் சென்றனர். அதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திபெத் மற்றும் அருணாச்சல பிரதேசத்துக்கு நம் நாட்டு தலைவர்கள் செல்லும்போதெல்லாம் அதற்கு சீனா கண்டனம் தெரிவிக்கும். அதனால் இந்த விவகாரத்தில் உடனடியாக பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்காமல் மத்திய அரசு அமைதியாக கவனித்து வருகிறது. தேவையான நேரத்தில் தகுந்த இடத்தில் பதிலடி கொடுக்க காத்திருக்கிறது என்பது தெளிவாகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.



கல்வானில் சீன கொடி


கிழக்கு லடாக் எல்லையில் உள்ள சில பகுதிகளில் சீனா ராணுவம் கடந்தாண்டு மே மாதத்தில் அத்துமீறி நுழைந்தது. அதை நம் படைகள் தடுத்து நிறுத்தின. பல சுற்று பேச்சுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் இரு நாட்டுப் படைகளும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் தன் தேசியக் கொடியை ஏற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோவை பதிவிட்டு, 'சீன மக்களுக்கு, நம் ராணுவத்தின் புத்தாண்டு வாழ்த்துகள்' என, சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியுள்ளது மற்றும் எல்லையில் அதன் தேசியக் கொடியை ஏற்றியுள்ள விவகாரத்தில் மத்திய அரசு திறம்பட செயல்படவில்லை என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
04-ஜன-202214:09:30 IST Report Abuse
Hari ராணுவ ரகசியம் அறிய யாரும் முயற்சிக்கவேண்டாம்,உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கெட்டுவிடும். அப்படி வேண்டும் என்றால் உடனடியா எல்லைப்பகுதிக்கு உங்களை அழைத்துச்செல்ல சின ராணுவம் தயார் அங்கு சென்று உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நீங்கள் தயாரா?ஜிங்ப்பிங் அழைக்கிறார்.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
04-ஜன-202213:36:00 IST Report Abuse
Murthy Please don't repeat the same comment
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
04-ஜன-202211:34:07 IST Report Abuse
pradeesh parthasarathy மத்திய அரசு ஏன் மவுனம் காக்கிறது... நாட்டு மாக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மத்திய அரசின் கடமை ...
Rate this:
Anand - chennai,இந்தியா
04-ஜன-202214:10:03 IST Report Abuse
Anandதிருட்டு கட்சியின் சேனல்களை சற்று ஒதுக்கிவிட்டு, இன்றைய ஆங்கில சானல் செய்தியை பார்க்கவும்...அதில் சீனாவுக்கு மட்டுமல்ல இங்குள்ள எட்டப்ப கட்சிகளுக்கும் பதில் உள்ளது......
Rate this:
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
04-ஜன-202215:02:19 IST Report Abuse
மிளிர்வன்டாய்.. டாய்.. பேட்டர்சன்.. வோன் கொட்டாய் சர்ச்சியில இன்னும் என்ன என்ன கேக்குறது கடம'ன்னு கத்து குடுத்துருக்காங்க..?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X