புதுடில்லி : நாடு முழுதும் 15 - 18 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று துவங்கியது. இதனால் ஏழாவது முறையாக ஒரே நாளில் நேற்று ஒரு கோடிக்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள 'கோவாக்சின்' மற்றும் 'கோவிஷீல்டு' உள்ளிட்ட தடுப்பூசிகள் நம் நாட்டில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜன., 16ல் துவங்கியது. முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.பின், 45 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 18 வயது நிரம்பியோர் என தடுப்பூசி பணிகள் அடுத்தடுத்த கட்டங்களை எட்டியது.

கடந்த ஆண்டு ஆக., 27, 31 செப்., 6, 27 மற்றும் டிச., 4 ஆகிய தேதிகளில் ஒரே நாளில் செலுத்திய தடுப்பூசி 'டோஸ்' எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது.பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளான செப்., 17ம் தேதி 2.5 கோடிக்கும் அதிகமான டோஸ் செலுத்தப்பட்டன.இதற்கிடையே உருமாற்றம் அடைந்த 'ஒமைக்ரான்' வைரஸ் தற்போது உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து நம் நாட்டில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று துவங்கியது.இதனால் ஒரே நாளில் செலுத்திய டோஸ் எண்ணிக்கை ஏழாவது முறையாக நேற்று ஒரு கோடியை கடந்தது. இதன் வாயிலாக இதுவரை செலுத்திய ஒட்டுமொத்த டோஸ் எண்ணிக்கை 146.68 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE