'யுடியூபர் துரைமுருகன், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைப்பு

Added : ஜன 04, 2022 | கருத்துகள் (7)
Advertisement
திருவள்ளூர்-தனியார் தொழிற்சாலையில் பெண்கள் இறந்ததாக, 'யுடியூபில்' வதந்தி பரப்பிய, துரைமுருகன், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள், திருவள்ளூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகில் உள்ள, தனியார் கல்லுாரி விடுதியில்
 'யுடியூபர் துரைமுருகன், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைப்பு

திருவள்ளூர்-தனியார் தொழிற்சாலையில் பெண்கள் இறந்ததாக, 'யுடியூபில்' வதந்தி பரப்பிய, துரைமுருகன், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள், திருவள்ளூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகில் உள்ள, தனியார் கல்லுாரி விடுதியில் தங்கியுள்ளனர்.இவர்களில் சிலருக்கு, கடந்த மாதம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த, ஒன்பது பேர் இறந்த தாக, வதந்தி பரவியதால், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில், ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக, சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டதாக, திருவள்ளூர் தாலுகா போலீசார், வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். இதில், யுடியூபில் வதந்திய பரப்பியதாக, திருச்சியைச் சேர்ந்த, சாட்டை துரைமுருகன், 34, கைது செய்யப்பட்டு, திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.இவர் மீது, ஏற்கனவே பல வழக்கு இருந்ததால், அவரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.இதை ஏற்ற கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, துரைமுருகன், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.திருவள்ளூர் கிளைச் சிறையில் இருந்த,துரைமுருகனை, போலீசார் நேற்று காலை, புழல் சிறையில்அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-ஜன-202219:25:15 IST Report Abuse
Bhaskaran Kammunistkal naattai vittuolinthaal thaan munnetram varum .kammunist tholirsangangalaivida Thiraavida katchikal tholirsangam evvalavo paravaayillai .niruvanangali mooduvatharku thunainirkamaataargal
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
06-ஜன-202210:35:34 IST Report Abuse
Sridhar கேடுகெட்ட இந்த கம்யூனிஸ்டுகளை நம்பி அவர்கள் பின்செல்லும் அப்பாவி மக்களை சொல்லவேண்டும். தமிழகத்தில் அப்பாவிகளுக்கு குறைவே கிடையாது. வடிகட்டின அயோக்கிய தீம்கவுக்கு வோட்டு போடும் அளவுக்கு அப்பாவிகள். தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் குணம் கொண்டவர்கள். பாவம்.
Rate this:
Cancel
05-ஜன-202222:27:11 IST Report Abuse
kulandai kannan திமுகவிற்கு முற்பகல் செய்தது இப்போது விளைகிறது.
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
06-ஜன-202213:53:44 IST Report Abuse
ramபிற்பகல் திமுகவிர்கு எதிர் வினை ஆற்றும் கவலை வேண்டாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X